குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலணாய்வுக் குழு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்தது.
இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.குஜராத் கலவர வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை அதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கலவரத்தில் கொல்லப் பட்டவருமான இஹ்சான் ஜபாரியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலணாய்வுக் குழுவை நியமித்து மூன்று மாதத்திற்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
சிறப்புப் புலணாய்வுக் குழு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 62 பேர்களை விசாரணை செய்ய முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலுபாய் ஹீரா பாய் தொடர்ந்த வழக்கில் அகமதாபாத் நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
ஆனால் இந்த விசாரணையை மேற்கொள்ள சிறப்புப் புலணாய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்ற மனுதாரரின் வாதத்திற்குப் பதில் அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கும் சிறப்புப் புலணாய்வுக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
குஜராத் கலவரங்களுக்கு மூல காரணம் மோடிதான் என்று அவனுடைய சகாக்களே தெஹல்கா டிவியில் பேட்டி கொடுத்து எவ்வளவோ நாளாச்சு. இன்னும் மோடியை விசாரணை பண்ணுவதற்கு கூட நம்ம நீதித்துறைக்கு இவ்வளவு காலம் ஆகிறது. நீதித்துறை மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழக்குமுன் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட வேண்டும். நடக்குமா?
நீ --> நீ
தி --> திட்டமிட்டு செய்தால்
த் --> இ(த்)துறை
து --> தூங்கும்
றை --> பா(றை) கரையும் வரை