இராக்கில் அமெரிக்கக் கூட்டுப் படையில் அங்கம் வகித்த ரொமேனியன் படையினர் 366 பேர் நேற்று நாடு திரும்பினர். 2003 ஆம் ஆண்டு 40 நாடுகள் அங்கம் வகித்த அமெரிக்கக் கூட்டுப் படையிலிருந்து ரொமேனியா தங்கள் படைகளை விலக்கிக் கொண்டதன் மூலம் தற்போது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியப் படையினர் மட்டுமே உள்ளனர்.
இராக்கில் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் கூட்டுப் படையிர் இராக்கியப் படையுடன் போரிட்டு, சதாமை அகற்றிவிட்டுத் தங்களுக்கு ஆதரவான அரசை அமைத்தனர். பின்பு பல்வேறு குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சதாம் தூக்கிலிடப் பட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பராக் ஒபாமா தாம் வெற்றி பெற்றால் இராக்கிலிருந்து அமெரிக்கப் படையை உடனடியாக வெளியேற்றுவேன் என்று உறுதி அளித்திருந்தார். வெற்றி பெற்ற பின் இராக்கிலிருந்து வெளியேற 2011ஆம் ஆண்டை இறுதிக் கெடுவாக வைத்துள்ளார்.2003ஆம் ஆண்டு 38 நாடுகளைச் சார்ந்த சமார் 3 இலட்சம் கூட்டுப் படையினர் இராக்கில் இருந்தனர். இவர்களில் 2,50,000 பேர் அமெரிக்காவைச் சார்ந்தவர்கள், 40,000 பேர் பிரிட்டனையும், 2,000 பேர் ஆஸ்திரேலியாவையும் சார்ந்தவர்கள்.
தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் படையினரை திரும்ப அழைத்துக் கொண்டதை அடுத்து, அமெரிக்காவைச் சார்ந்த 1,40,000 படையினரும், பிரிட்டனைச் சார்ந்த 400 பேரும், குறைந்த அளவிலான ஆஸ்திரேலியப் படையினரும் மட்டுமே இராக்கில் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.