18/6/09

ஈரான் தேர்தல் சர்ச்சைகளில் அமெரிக்கா தலையிடாது-அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

ஈரான் அதிபர் தேர்தல் தொடர்பாக நடைபெற்றுவரும் சர்ச்சைகள் தொடர்பாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வரும் ஹுசைன் மூசாவிக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிடவேண்டும் எனக்கோரி மேற்கத்தியவாதிகளின் தரப்பிலிருந்து உருவான நிர்பந்த்தத்தை தொடர்ந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஒபாமா இவ்வாறு கூறினார்.மேலும் அவர் கூறுகையில்,"அஹ்மத் நிஜாதிற்கும் ஹுசைன் மூசாவிக்கும் இடையில் ஏதொரு வேறுப்பாட்டையும் தான் காணவில்லை. ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை உலக மக்கள் விரும்பவில்லை".என்றார்.ஆனால் சமாதானமான போராட்டங்களை அரசு அடக்குவதை அவர் கண்டித்தார்.

முஸ்லிம் உலகோடு அமெரிக்காவின் புதிய அணுகுமுறையின் வெளிப்பாடுதான் இது என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஆனால் பி.பி.ஸியின் வாஷிங்டன் செய்தியாளர் ஜஸ்டின் வைப் இதுபற்றி கூறுகையில்,"நஜாதின் வெற்றியில் யாதொரு முறைகேடும் நடைபெறவில்லை என்று ரகசிய ஏஜன்சிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஒபாபாமா இவ்வாறு கூறுகிறார்.மேலும் குறைகேடு குற்றச்சாட்டுப்பற்றி விசாரிக்க ஈரானின் ஆன்மீக உயர்சபையான கார்டியன் கவுன்சில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் இடங்களில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தலாம் எனக்குறியிருப்பதும் ஒபாமாவின் இப்பேச்சுக்கு காரணமாக இருக்கலாம்"என்றார்.

ஒபாமாவை அதிபர் தேர்தலில் எதிர்த்து நின்ற குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜன் மெக்கயின் ஈரான் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்