12/7/09

மேற்குவங்காளம்:முர்ஷிதாபாத்தில் கலவரம், 6 பேர் மரணம்

0 கருத்துகள்
மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்ப்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். நவோதயா மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர் பிரிவினரிடையே தொடங்கிய இக்கலவரம் கிராமங்களுக்கும் பரவியது.
வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகைக்குச்செல்லவிருந்த முஸ்லிம் மாணவர்களை இன்னொரு பிரிவு மாணவர்கள் தடுத்ததுதான் கலவரத்திற்கு காரணம். வெள்ளிக்கிழமைகளில் உணவு இடைவேளையை ஒரு மணி நேரத்திலிருந்து அரை மணி நேரமாக மாற்றவேண்டும் என்று சங்க்பரிவார்களோடு தொடர்புடைய மாணவர் அமைப்பு ஒன்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
இந்த பிரச்சனை இருக்கும்பொழுதுதான் ஜும்ஆத் தொழுகைக்குச் சென்ற மாணவர்களை சிலர் பள்ளிக்கூடத்தின் கேட்டை பூட்டி தடைச்செய்தனர். மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் வெளியில் உள்ளவர்களும் தலையிட்டதால் கலவரமாக மாறியது. கலவரத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் போலீஸ் வேடத்தில் வந்த சில விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல் உண்டு.தொடர்ந்து கார்த்திக் மஹராஜ் என்பவரின் தலைமையிலான பாரத் சேவா சங்கம் என்ற ஆசிரமத்தின் தொண்டர்கள் திரிமோஹினி கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
கலவரத்தில் 40 மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. கலவரக்காரர்கள் ஏராளமான கடைகளை கொள்ளையடிக்கவும் அவற்றை தீக்கிரையாக்கவும் செய்துள்ளனர். கலவரம் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்துறைச்செயலாளர் அர்சேது சென் கூறுகிறார். கலவரப்பகுதிகளில் தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள‌ நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.