கடந்த 24 மணி நேரத்தில் 8 ராணுவ வீரர்களை இழந்துள்ளது பிரிட்டீஷ் ராணுவம். இதனை பிரிட்டீஷ் ராணுவமே தெரிவித்துள்ளது. இதில் 5 வீரர்கள் ஆப்கனின் தெற்கு ஹெல்மான்ட் மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பலியானார்கள். இது பிரிட்டீஷ் படையினருக்கு ஒற்றைத்தாக்குதலில் ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பாகும்.
கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பிறகு பிரிட்டீஷ் படை இதுவரை 184 வீரர்களை இழந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகு 179 வீரர்களை இழந்துள்ளது பிரிட்டீஷ் படை.கடந்த 10 நாட்களில் ஆப்கனில் அமெரிக்க பிரிட்டீஷ் படையைச்சார்ந்த 4 உயரதிகாரிகள் உட்பட 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகமாகும் உயிரிழப்பால் பிரிட்டீஷ் படைக்கு பொதுமக்களின் ஆதரவில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறப்படுகிறது. பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபன்ட் தெரிவிக்கையில்,"கடந்த சில நாட்கள் சோகமானவை"எனக்குறிப்பிட்டார். பிரிட்டீஷ் படையினரின் இழப்புப்பற்றி பிரிட்டனைச்சார்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் கிறிஸ் பெல்லாமி குறிப்பிடுகையில்,"நிச்சயமாக கடந்த 10 நாட்களில் பிரிட்டீஷ் படை கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் போருக்குச்செல்லும்போது உங்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லாமல் போகும்". என்றார்.
இத்தாலியில் நடைபெறும் G-8 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்ட பிரிட்டீஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ஆப்கானில் பிரிட்டீஷ் படையினரின் உயிரிழப்பைப்பற்றி கூறுகையில்,"இது கடுமையான கோடைக்காலம் என்றுகுறிப்பிட்டார். கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுக் கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு விபரம்:
அமெரிக்கா 730
பிரிட்டன் 184
கனடா 124
ஜெர்மனி 35
பிரான்சு 28
ஸ்பெயின் 25
டென்மார்க் 22
நெதர்லாந்து 19
பிற நாடுகள் 67
மொத்தம் 1228
ஆதாரம்:ராய்டர் News Source: Al jazeera
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.