1/7/09

இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடை: தீரா துரிதத்தில் காஸ்ஸா - ரெட் க்ராஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் isreel எற்படுத்திய தடையின் காரணமாக காஸ்ஸா பகுதி மக்கள் துரிதத்தின் பிடியில் சிக்கித்தவிப்பதாக சர்வதேச ரெட்க்ராஸ் கமிட்டி கூறியுள்ளது.

இங்கு வசிக்கும் 15 லட்சம் மக்கள் தண்ணீர், உணவு, மருந்துகள் ஆகியன கிடைக்காமல் துன்புறுவதாகவும் கமிட்டி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.1100 பேர்கள் கொல்லப்பட்ட இஸ்ரேலின் காஸ்ஸா மீதான கொடூரத்தாக்குதலுக்கு பின் 6 மாதம் கழித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை காஸ்ஸாவை பூகம்பம் பாதித்த நிலப்பரப்பிற்கு ஒப்பிடுகிறது.

தாக்குதலில் தகர்க்கப்பட்ட வீடுகளும், கட்டிடங்களும், சாலைகளும் அப்படியே கிடக்கிறது. காரணம் கட்டிடம் கட்டும் பொருள்களை ஏற்றிவந்த வாகனங்களை அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதால். இஸ்ரேலின் தாக்குதலில் 50 ஆயிரம் வீடுகள்,800 வியாபார நிறுவனங்கள், 200 பள்ளிக்கூடங்கள்,39 ம‍ஸ்ஜிதுகள், 2 சர்ச்சுகள் ஆகியன முழுவதுமாகவோ அல்லது ஒருபகுதியோ தகர்க்கப்பட்டிருந்தது. இஸ்ரேலின் அக்கிரமமான தாக்குதலைத்தொடர்ந்து மக்களின் புனர்வாழ்வுக்காகவும், கஸ்ஸாவின் புனர் நிர்மாணத்திற்காகவும் சர்வதேச நாடுகளும், ஏஜன்சிகளும் 450 கோடி டாலர் வாக்களித்திருந்தபோதிலும் காஸ்ஸாவின் அனைத்து பகுதிகளிலும் இ‍ஸ்ரேல் ஏற்படுத்திய தடையால் எ‍ந்த திட்டத்தையும் நடைமுறைபடுத்த முடியவில்லை என ரெட் க்ராஸின் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

காஸ்ஸாவில் வசிக்கும் 15 லட்சம் பேரில் பகுதியும் குழந்தைகள்.இவர்களுக்கு போதிய உணவோ,சிகிட்சையோ கிடைப்பதில்லை.தகர்க்கப்பட்ட மருத்துவமனைகள் புனர் நிர்மாணிக்கப்படாததால் அவை மீண்டும் இயங்க இயலவில்லை என ரெட் கிராஸ் கூறுகிறது.கடும் வறுமையிலிருக்கும் காஸ்ஸா மக்கள் அவசியமான பொருள்களை வாங்குவதற்கு வீட்டுப்பொருள்களை விற்கவேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக காஸ்ஸாவின் ரெட்கிராஸ் சங்கத்தலைவர் க்ரான்ட் கூறினார். இ‍ஸ்ரேலின் கடுமையான தடைகளால்தான் இச்சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக ரெட்க்ராஸ் தெளிவுப்படுத்தியது.
ஜனநாயகமுறையிலான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஃபலஸ்தீனில் ஹமாஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபிறகுதான் இ‍ஸ்ரேல் இத்தகைய அநீதமான தடைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.