2/7/09

பாரமுல்லாவிலிருந்து சி.ஆர்.பி.எஃப்(மத்திய ரிசர்வ் படை ) வெளியேற்றம்!

ஜம்மு கஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்திலிருந்து மத்திய ரிசர்வ் படயினரை வெளியேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பாரமுல்லாவில் செவ்வாயன்று இளைஞர் ஒருவரை மத்திய ரிசர்வ் படையைச் சார்ந்த ஒருவர் சுட்டுக் கொன்றதை அடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வந்த மத்திய ரிசர்வ் படையினரை உடனடியாக மாவட்டத்தை வெளியேறுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலக் காவல்துறையே சட்டம் ஒழுங்கை கவனிக்கும் என்று மாநிர அரசு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த சில நாள்களுக்கு முன் இரு பெண்களை கடத்தி வன்புணர்ந்து கொலை செய்ததை அடுத்து மத்திய ரிசர்வ் படையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது நாளாக பாராமுல்லாவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்த மூன்று நாள்களில் படையினரால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
மாநில அமைச்சர்களான அலி முகமது சாகர் மற்றும் பீர்ஜாதா முகமது சயீத் ஆகியோர் செவ்வாயன்று இந்தப் பகுதிக்குச் சென்று அங்குள் மக்களைச் சந்தித்துப் பேசினர். தவறு செய்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை இருந்தது.நேற்று கான்பூராவில் இளைஞர் சுட்டுக் கொல்லப் பட்டதை அடுத்து இந்தப் பகுதி முழுவதும் மீண்டும் பதட்டமான நிலையிலேயே உள்ளது.