5/7/09

ஷோபியான்:கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உத்தரவு

கஷ்மீர் மாநிலம்ஷோபியானில் சி.ஆர்.பி.எஃப் வெறியர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்ட இரண்டு இளம் பெண்களின் உடல்களை அடக்கஸ்தலங்களிலிருந்து எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைச்செய்யவும், மரபணு மாதிரிகளை சேகரிக்கவும் ஜம்மு கஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரபணு அறிக்கை தொலைந்ததாலும்,ஏற்கனவே செய்யப்பட்ட பிரேத பரிசோதனை சரியான முறையில் செய்யப்படாததாலும் கொல்லப்பட்ட ஆஸியா ஜான் மற்றும் நிலோஃபர் ஜான் ஆகியோரின் உடல்களை மீண்டும் பரிசோதனைச்செய்ய நீதிபதிகள் பாரின் கோஷ்,முஹம்மது யஃகூப் ஆகியோர் உட்பட்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

பரிசோதனைக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழுவை நியமிக்க ஸ்ரீநகர் மருத்துவக்கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது."இந்நிகழ்வு யாரையும் உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய நிகழ்வு.ஜாதி மத பேதமற்று இப்பகுதியில் வாழும் அனைவரும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர்." கொலை நிகழ்வைத்தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் ஆவேச எழுச்சியை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கூறினர்.

போலீஸ் சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஜனரல் ஃபாரூக் அஹ்மத்,டி.ஐ.ஜி ரவூஃபுல் ஹஸன் ஆகியோரை சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு மேற்பார்வையிடும் பொறுப்பை நீதிமன்றம் ஒப்படைத்தது. இந்நிகழ்வைத்தொடர்ந்து இடை நீக்கம் செய்யப்பட்ட முன் எஸ்.பி உள்ளிட்ட நான்கு போலீஸ் அதிகாரிகளை நார்கோ பரிசோதனைச்செய்யவும், விரிவான முறையில் விசாரணை நடத்தவும் நீதி மன்றம் எஸ்.பி ஷாதின் மாலிக் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவை நீதி மன்றம் கேட்டுக்கொண்டது.

ஒவ்வொரு வாரமும் விசாரனை அறிக்கையை நீதி மன்றத்தில் சம்ர்ப்பிக்கவும் நீதி மன்றம் நிர்ணயித்துள்ளது.ஷோபியான் வழக்கோடு தொடர்புடைய பொது நல வழக்கை கஷ்மீர் உயர்நீதிமன்ற அசோசியேசன் தொடர்ந்ததையொட்டிதான் நீதி மன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது.22 வயதுடைய நிலோஃபர் ஜான் மற்றும் அவருடைய சகோதரன் மனைவி 17 வயது ஆஸியா ஜான் ஆகியோரின் உடல்கள் கஷ்மீர் ஷோபியானில் அருவியின் அருகில் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் நீரில் மூழ்கி மரணித்ததாக கூறி மூடிமறைக்க அதிகாரிகள் முயன்றனர்.ஆனால் பொதுமக்களின் வலுவான ஆவேசமான போராட்டத்தைத்தொடர்ந்து இருவரும் வன்புணர்ச்சி செய்யப்பட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டது.இந்நிகழ்வை குறித்து விசாரணைச்செய்த ஜான் கமிஷன் பிரேத பரிசோதனைச்செய்த டாக்டர்களும்,ஃபாரன்சிக் ஆய்வுகூட அதிகாரிகளும், போலீஸாரும் வழக்கு விசாரணையில் தங்களது கடமையை செய்யத்தவறியதாக கண்டறிந்தது. பெண்களின் உடல்களை கண்டெடுத்த இடத்திலும் சுற்றுபகுதிகளிலும் இருந்த அனைத்து போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் அனைவரின் விபரங்களை சேகரிக்கவும் நீதி மன்றம் உத்தரவிட்டது.

செய்தி ஆதார‌ம்:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்