குஜராத் மாநில கோத்ரா கலவரம் பற்றிய வழக்கினை விசாரிக்க பெண் நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ரெயில் எரிப்பை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. இஹ்ஷான் ஜாப்ரி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கலுமாலிவாத் விடுதலை செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து இஹ்ஷான் ஜப்ரியின் மனைவி ஷாகியா ஜப்ரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். இக்குழு குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என மேலும் 62 பேரிடம் விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கலுமாலிவாத் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்- மந்திரி நரேந்திரமோடி மற்றும் 62 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எச்.என்.தேவானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. எனவே இது சம்பந்தமாக அங்கு விசாரிக்க முடியாது. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கில் இருந்து விலகி கொள்கிறேன் என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.