9/7/09

கஷ்மீரில் அதிகரித்து வரும் இந்தியப்பாதுகாப்புப்படையினரின் அட்டூழியம், மக்கள் ஆவேசம்

0 கருத்துகள்

கஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அதனை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு அதனை தீவிரவாதிகளிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் ராணுவத்தையும்,துணை ராணுவப்படையினரையும் குவித்து வரும் இந்திய அரசு அங்குள்ள அப்பாவி குடிமக்களின் உயிரையும்,கற்பையும் சூறையாடி வரும் இந்தியப்பாதுகாப்பு படையினரின் அட்டூழியத்தை தடுப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பாக ஷோபியானில் உறவினரான இரண்டு அப்பாவி முஸ்லிம் இளம் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலைச்செய்தனர் சி.ஆர்.பி.எஃப் வெறியர்கள்.இந்த அக்கிரமத்தை கண்டித்து கடுமையான போராட்டத்தை நடத்தினார்கள் கஷ்மீர் மக்கள்.மக்களின் கோபத்தை கண்டு மிரண்ட மத்திய அரசு கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியது.இந்நிகழ்வில் கஷ்மீர் உயரிநீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது போதுமான நடவடிக்கைகள் மேற்க்கொள்ள சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது.
சில தினங்களுக்கு முன்பு பாரமுல்லாவில் பாதுகாப்புப்படையினர் பெண்களிடம் மோசமாக நடந்துக்கொண்டதை கண்டித்து தெருவில் இறங்கி போராடிய மக்களுக்கு நேராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்நிலையில் கஷ்மீர் மாநிலம் மைசூமாவில் 6 தினங்களுக்கு முன்பு காணாமல் போன இஸ்லாமியா கல்லூரி மாணவர் அஸ்ரார் முஸ்தாஃஹ் அஹ்மத் தாரின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நெய்வாரியில் கண்டெடுக்கப்பட்டது.இறந்துபோன மாணவனின் கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டிருந்தது.தலையிலும் முகத்திலும் காயங்கள் இருந்தன.பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.பாரமுல்லாவில் சில தினங்களுக்கு முன்பு 4 பேர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் பொதுமக்களுக்குமிடையே நடந்த மோதலின்போதுதான் மாணவர் அஹ்மத் தார் காணாமல் போயிருந்தார். இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் நடத்திய துயர ஊர்வலத்தில் போலீஸ் கண்ணீர் புகையை உபயோகித்தது. இவ்வூர்வலத்தின்போது ஆவேசம் கொண்ட மக்கள் போலீஸ் வாகனங்களுக்கு நேராக கல்லெறியவும்,போலீஸ் போஸ்ட்டுகள் தகர்க்கவும் செய்தனர்.
ஸ்ரீநகரில் தொடங்கிய பொதுமக்களின் ஆவேசமான போராட்டம் கஷ்மீரின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.கடைகள் அடைத்துக்கிடக்கின்றன.முழு அடைப்புக்கான அனுபவம் நகரத்தில் தென்பட்டது.போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட 45 பேருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.
இத்தகவல் தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ் வெளியிட்ட‌ செய்தியிலிருந்து எடுத்தெழுத‌ப்ப‌ட்ட‌து.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.