6/7/09

குவாண்டனாமோ சிறைச்சாலைகளைப் போன்று இந்தியாவிலும் கொடூர சிறைகள் - தி வீக் பத்திரிகை வெளியிடும் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறைச்சாலைகளைப் போன்று சட்டத்திற்கு புறம்பான கொடூர சித்திரவதைக்கூடங்கள் இந்தியாவிலும் செயல்படுவதாக வெளியான தகவல் நாடு முழுவதும் விவாதத்தை கிளப்புகிறது.
மும்பை,டெல்லி,கல்கத்தா,கஷ்மீர்,குஜராத் ஆகிய இடங்களில் 15 கொடுஞ்சிறைகள் உள்ளதாக தி வீக் இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது. கொல்கத்தாவில் இரண்டும்,அஸ்ஸாமில் ஒன்றும், குஜராத், மும்பை, கஷ்மீர் ,டெல்லி ஆகிய இடங்களில் 3 வீதமும் இத்தகைய சிறைகள் செயல்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ வின் முக்கிய அதிகாரிகள் இச்சிறைகளுக்கு அடிக்கடி வந்து போகின்றனர். எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல், கைதுச்செய்யபடுபவர்களை தீவிரவாத முத்திரை குத்தி கண்களைக்கட்டி இத்தகைய சித்திரவதைக்கூடங்களுக்கு கொண்டுச்செல்கின்றனர்.கடுமையான அடி உதைகளும் இன்னும் மனித இரக்கமற்ற சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு நடைபிணங்களாக்கப்படும் இவர்கள் ஏதோ கண்காணா இட‌ங்களில் கொண்டு விடப்படுகிறார்கள்.

தி வீக் ந‌ட‌த்திய‌ புல‌னாய்வில் மும்பையில் நான்கு அறைக‌ளுள்ள‌ ஒரு சித்திர‌வ‌தை கூட‌ம் அமைந்திருப்ப‌து ஆரெய் கால‌னிக்கு அருகில் என்று கூறுகிற‌து.ம‌லேகான் குண்டுவெடிப்பில் பொய்க்குற்ற‌ஞ்சாட்டி முன்புக் கைதுச்செய்த‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை இங்கு வைத்துதான் விசாரித்துள்ளார்க‌ள். சித்திர‌வ‌தைச்செய்ய‌ப்ப‌டும்பொழுது அல‌ற‌ல் ச‌ப்த‌ம் வெளியில் கேட்காம‌ல் இருக்க‌ ச‌வுண்ட் ஃப்ரூஃப் செய்ய‌ப்ப‌ட்ட‌ அறைக‌ள் கொண்ட‌ சிறை மும்பை காலா ச‌வுக்கில் உள்ள‌து.இர‌ண்டு அறைக‌ள் ம‌ட்டும் கொண்ட‌ இன்னொரு சிறை மும்பையில் செம்பூரில் உள்ள‌து.டெல்லியில் சாண‌க்கிய‌புரி, துவார‌கா, லோடி காலனி ஆகிய இடங்களில் இந்த வெஞ்சிறைகள் உள்ளன. கஷ்மீர்,கொல்கத்தா,குஜராத் ஆகிய இடங்களிலுள்ள ரகசிய சித்திரவதை சிறைக்கூடங்கள் பற்றியும் தி வீக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மின்சார அதிர்ச்சிக்கொடுப்பது,நிர்வாணமாக்கி மன உறுதியை தகர்க்கும் விதமாக அவமானப்படுத்துவது, சிறை அறையில் அதிக வெப்பம் ஏற்படுத்தி திடீரென அதிக குளிரூட்டுவது, உறங்க விடாமல் தடுப்பது போன்றவை இங்குள்ள சித்திரவதை முறைகள். ஆனால் சட்டப்பூர்வமான எல்லா ஆதாரங்களையும் சிறப்பு காவல் பிரிவினர் அழிக்கவும் செய்கின்றனர்.இம்மாதிரியான இந்திய குவான்டனாமோ சித்திரவதைக்கூடங்களில் மனித தன்மையற்ற முறையில் சித்திரவதைச் செய்யப்படுவது இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்படும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண சித்திரவதைகள் மூலம் உண்மை கண்டறிய முடியாது ஆதலால் இத்தகைய கொடூர சித்திரவதைக்கூடங்கள் செயல்படுவதாக சில போலீஸ் உயர் அதிகாரிகள் நியாயப்படுத்துகின்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டம் நடைமுறையில் இருந்த காலக்கட்டத்தில் சில இடங்களில் ரகசிய சித்திரவதைக்கூடங்கள் இருந்தன. மும்பைக்குண்டுவெடிப்பில் கைதுச்செய்யப்பட்டவர்களை சி.ஐ.ஏ மற்றும் மொசாதைச் சார்ந்தவர்கள் இந்தியாவில் வைத்து விசாரணைச்செய்தபொழுது சில மனித உரிமை அமைப்புகள் குவான்டனாமோ மாதிரியில் இந்தியாவிலும் சித்திரவதைக்கூடங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் இந்த தேசம் தற்ப்போது சந்திக்கும் சவால்களை சந்திக்க முடியாது என்றும் ஆதலால் இந்த நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளை ஒடுக்குவதற்கு இம்மாதிரியான சட்டத்தின் கண்ணில் மண்ணைதூவிச்செயல்படும் சித்திரவதைக்கூடங்கள் ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு முக்கிய உளவுத்துறை அதிகாரி தெரிவித்ததாகவும் இம்மாதிரி சித்திரவதைக்கூடங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தப்போவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாகவும் தி வீக் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
News Source:Thejas Malayalam Daily.
மேலும் இச்செய்தியைப்பற்றி அதிகமான தகவல் பெற இங்கு க்ளிக் செய்யவும்