6/7/09

பர்தா அணிந்ததை இழிவுப்படுத்தியவரை எதிர்த்து வழக்குத்தொடர்ந்த முஸ்லிம் பெண் கோர்ட் வளாகத்தில் படுகொலை ஜெர்மனியில் பயங்கரம்

எகிப்தைச்சார்ந்தவர் டாக்டர்.மர்வா எல்‍ஸெர்பினி.ஃபார்மஸியில் டாக்டர் பட்டம்பெற்றவர். இவருடைய கணவர் எல்வி அலி ஓகாஷ் ஜெர்மனியில் எகிப்து நாட்டின் தூதரக அதிகாரியாக உள்ளார். இவர் ஜெனடிக் எஞ்சினியரிங் விரிவுரையாளரும் கூட.டாக்டர் மர்வா 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.2008 ஆம் ஆண்டு ஆகஸ்டில்.ஜெர்மனியில் ஒரு பார்க்கில் வைத்து ஒரு இளைஞர் இவர் தலையில் இஸ்லாமிய முறைப்படி ஸ்கார்ப் அணிந்து தலையை மறைத்துள்ளதை கடுமையான வார்த்தைகளை உபயோகித்து இழிவுப்படுத்தியுள்ளார்.

இஸ்லாமிய நெறியினை பேணியதற்காக இழிவுப்படுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு வழக்காக பதிவுச்செய்தார் மர்வா. நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 780 யூரோக்கள் அபராதமாக விதித்தது.

இந்நிலையில்தான் கடந்த 1 ம் தேதி புதன்கிழமை பிரஸ்டன் நீதி மன்றத்திற்கு வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்க வந்த மர்வாவை கோர்ட் வளாகத்திற்குள் வைத்து இவரால் வழக்குத்தொடுக்கப்பட்ட இளைஞன் 18 முறை கத்தியால் குத்தியதால் கடுமையான காயம் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் சகோதரி மர்வா(இன்னாலில்லாஹி...)இது அவருடைய கணவன் மற்றும் 2 குழந்தைகளின் முன் நடைப்பெற்றுள்ளது. மர்வாவை காப்பாற்ற முயன்ற அவருடைய கணவ‌ர் 3 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார்(இன்னொரு செய்தி மர்வாவின் கணவர் போலீஸால் துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கூறுகிறது). மர்வாவின் கணவர் மருத்துவமனையில் அவசர சிகிட்சைப்பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிட்சைப்பெற்று வருகிறார். ஜெர்மன் பத்திரிகைகள் இந்த செய்தியை முழுமையாக வெளியிடவில்லை.சில தினங்களுக்கு முன்புதான் பிரான்சு அதிபர் சர்கோசி பர்தாவுக்கெதிராக விஷத்தை கக்கினார்.இந்நிகழ்வு மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் இஸ்லாமோ ஃபோபியாவின் பயங்கரத்தை வெளிப்படுத்துகிறது. இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணியதற்காக இழிவுப்படுத்தப்பட்டதற்காக வாய்மூடி இருக்காமல் நீதிக்கான போராட்டத்தில் மரணமடைந்துள்ளார் சகோதரி மர்வா ஸெர்பினி.வல்ல இறைவன் அல்லாஹ் அவருடைய பாவங்களை பொறுத்து உயிர் தியாகிகளின் அந்தஸ்தை அளிப்பானாக!
தொடர்புடைய வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.