6/7/09

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை - யூகியா அமானோ

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை என்று சர்வதேச அணு சக்தி கழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானைச்சார்ந்த யூகியா அமானோ தெரிவித்தார்.சர்வதேச அணுசக்தி கழகத்தின் ரேகைகளை ஆய்வுச்செய்ததில் ஈரானுக்கெதிராக எந்தவொரு ஆதாரங்களையும் கண்டு பிடிக்க முடியவில்லை என டைரக்டர் ஜனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டபின் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமானோ இதனை தெரிவித்தார்.
எல்லா நாடுகளையும் போல் ஈரானும் ஐ.நா வின் தீர்மானங்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது.அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என் நம்புகிறேன்.அமெரிக்கா குற்றஞ்சாட்டுவதுபோல் யுரேனியத்தை செறிவூட்டுவது அணு ஆயுதம் தயாரிப்பதற்கல்ல.மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு என்ற ஈரானின் விளக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமானோ தெரிவித்தார்.ஈரான் மற்றும் சிரியாவின் அணு சக்தி விசயத்தில் யாதொரு தேவையற்ற கரடுமுரடான நடவடிக்கைகளை எடுக்க மாட்டோம் என்று கூறிய அவர் அமெரிக்கா மற்றும் சில நாடுகளின் மிரட்டல் ஈரானை அபாயகரமான ஆயுத‌ தயாரிப்பை நோக்கி செலுத்தும் என அவர் எச்சரித்தார்.
12 வருட சேவைக்கு பிறகு நவம்பரில் பதவி விலகும் முஹம்மது அல் பராதியின் காலியிடத்தை நிரப்ப யூகியோ அமானோ தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கறிஞரான அமானோ ஜப்பானின் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தில்தான் தனது அதிகாரப்பூர்வ பணியை துவக்கினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்.