5/7/09

ஹாலிவுட் படங்களின் அரபு விரோதப்போக்கு

திரைப்படம் என்பது பட்டிக்காடு முதல் மேல்தட்டு மக்கள் வரை சென்றடையும் ஒரு வலுவான ஊடகம். மக்களின் முக்கியப்பொழுதுப்போக்காக மாறிப்போன இந்த ஊடகத்தை இஸ்லாத்தின் எதிரிகள் இன்று கையில் எடுத்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு வெறுப்புணர்வு பிரச்சாரத்தை(Hate policy) பரப்பி வருகிறார்கள்.இது இன்று நேற்றல்ல தொன்றுத்தொட்டே நடந்து வருகிறது. காரணம் முஸ்லிம்கள் இத்துறையில் அதிகம் கவனம் செலுத்தாததுதான். அதற்காக எல்லாப்படங்களையும் பார்க்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள் நமக்கு எதிராக நடக்கும் இந்த ஊடக யுத்தத்தில் கவனம் செலுத்தி உடனுக்க்குடன் விமர்சனங்களைச்செய்து மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்ப்பதோடு நாமும் இத்துறையில் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு பங்காற்ற முன் வரவேண்டும். அப்பொழுதுதான் நாம் இந்த சதி வலையை முறியடிக்க இயலும். ஆகவே இது சம்பந்தமாக விடியல் வெள்ளி மாத இதழில் 2008 ஜூலை மாதம் எழுத்தாளர் MSAH அவர்களால் எழுதப்பட்ட கருத்துக்கட்டுரையை பாலைவனத்தூதில் சமுதாய விழிப்புணர்வுக்காக பிரசுரம் செய்கிறோம்.

ஹாலிவுட் படங்களின் அரபு விரோதப்போக்கு


டாக்டர் ஜாக் ஷஹீன் என்ற எழுத்தாளர் சமீபத்தில் ஒரு நூலை எழுதியுள்ளார்.அரபுக்கிறிஸ்தவராகிய இவர் 30 வருடங்கள் ஆய்வுச்செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.நூலின் பெயர்: The Reel Bad Arabs:How Hollywood Villifies a People. ஹாலிவுட் என்ற பெயரை அறியாதவர் இந்த உலகில் எவரும் இருக்கமாட்டார்.அமெரிக்கத்திரைப்படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஓரிடம்தான் ஹாலிவுட். இது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது.ஆதலால் அமெரிக்கத்திரையுலகை ஹாலிவுட் என்றழைப்பார்கள்.

இதனை வழியொட்டிதான் நம்மூரிலும் பல "கட்அ வுட்"களைக்கொண்டு வந்தார்கள்.தமிழ்த்திரைப்படங்கள் பெரும்பாலும் சென்னை கோடம்பாக்கத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்படுகின்றன.இதனால் தமிழ் திரையுலகை "கோலிவுட்"என்றழைக்கின்றார்கள்.பம்பாயை மையமாகவைத்து ஹிந்தித்திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் ஹிந்தித்திரையுலகை "பாலிவுட்"என்றழைக்கின்றார்கள்.
உலகம் முழுவதும் அதிகம் "மவுசு" உள்ள ஹாலிவுட் படங்களில் கடந்த 1896 முதல் 2000 ஆம் ஆண்டு வரை வெளிவந்த 1000 படங்களை ஜாக் ஷஹீன் தனது ஆய்வுக்கு எடுத்துள்ளார். இவைகளில் 900க்கும் மேற்ப்பட்ட படங்கள் அரபுகளையும் முஸ்லிம்களையும் கோரமாகச் சித்தரிக்கின்றன.அதாவது எதிர்மறையாக வெளிவந்துள்ளன.52 படங்கள் அரபுக்களைக்குறித்து நடுநிலையாகவும், 12 படங்கள் நேர்மறையாகவும்(பாசிட்டிவ்)வெளிவந்துள்ளன.
"அரப் என்றால் யார்?" என்று ஷஹீன் இந்நூலில் கேட்கிறார்.ஹாலிவுட்டின் பதில்:"கொடூரமான கொலைக்காரர்கள், காட்டுமிராண்டித்தனமான வாடகைக்கொலையாளிகள்,மதவெறியர்கள்,எண்ணை வளம் அதிகம் கொண்ட அகம்பாவிகள், பெண்களை அடிமைப்படுத்துபவர்கள்." இப்படித்தான் ஹாலிவுட் படங்கள் நமக்கு அரபுக்களைப்பற்றிய வினாக்களுக்கு விடையளிக்கின்றன.
அவரது ஆய்வுப்படி 900க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்கள் அரபுகளை வில்லன்களாக சித்தரிக்கின்றன.இந்த வில்லன்களில் அதிகமானவர்கள் அரபு ஷேக்குகளாக இருப்பார்கள்.அல்லது எகிப்தியர்களாக இருப்பார்கள். அல்லது ஃபலஸ்தீனர்களாக இருப்பார்கள்.மீதியுள்ள மாநிறமுடைய அல்ஜீரியா,ஈராக்,ஜோர்தான்,லெபனான்,லிபியா,மொராக்கோ,சிரியா,துனீசியா,எமன் போன்ற அரபு தேசங்களைச்சேர்ந்த அரபுகளாக இருப்பார்கள்.
கார்ட்டூன் படங்கள் கூட அரபுக்களை விட்டு வைக்கவில்லை.1982ல் வெளிவந்த 1001 Rabbit Tales என்ற கார்ட்டூன் படம் அரபுகளை மோசமாகச் சித்தரிக்கின்றது.

ஒரு படம் கூட ஃபலஸ்தீனர்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், இஸ்ரேலியர்களை கொடூரமான ஒடுக்குபவர்களாகவும் காண்பிப்பதில்லை.
இஸ்ரேலிய யூத ராணுவ வெறியர்களும்,யூதக் குடியேற்றவாதிகளும் ஆலிவ் மரங்களை வேரோடு பிடுங்கி எறிவதையும்,ஃபலஸ்தீன அப்பாவி குடிமக்களை சுட்டுப்பொசுக்குவதையும் ஒரு ஹாலிவுட் படம் கூட காண்பிப்பதில்லை.

ஃபலஸ்தீனத்தின் பரிதாபத்திற்குரிய குடிமக்கள் கொடூரமான யூத ஆக்கிரமிப்பின் கீழ் தங்கள் வாழ்வை நகர்த்துவதற்குப் போராடுவதையும், அகதிகள் முகாமில் அல்லலுறுவதையும், சொந்த மண்ணிலேயே அன்னியர்களாக அலைவதையும் ஒரு ஹாலிவுட் படம் கூட இதுவரை காண்பித்ததில்லை.

1994 true liஎச் என்ற படம் வெளிவந்தது.1987 இல் Wanted Dead or Aliவெ என்ற படம் வெளியானது.இந்த இரண்டு படங்கள் உட்பட 7 ஹாலிவுட் படங்கள் ஃபலஸ்தீனர்களை அணு ஆயுத பயங்கரவாதிகளாக சித்தரித்தன.
Half-Moon Street(1986),Terror in Beverly Hills(1988),Appointment with Death(1988) ஆகிய படங்கள் உட்பட 11 ஹாலிவுட் படங்கள் ஃபலஸ்தீனர்களை கெட்டச்செயல் செய்பவர்களாகவும்,மேலை நாட்டுப்பெண்களையும்,குழந்தைகளையும் மிரட்டுபவர்களாகவும், காயப்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கின்றன.
இந்த அடிப்படையில் நூலாசிரியர் ஜாக் ஷஹீன் ஓர் உண்மையை கண்டுபிடித்துள்ளார்,அதாவது பல படங்கள் இஸ்ரேலிலேயே படம்பிடிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். இந்த படங்கள்தான் 2003இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதை இலகுவாக்கிக்கொடுத்திருக்கும் என்று ஜாக் ஷஹீன் கூறுகிறார்.அதாவது அரபுகளைத்தொடர்ந்து வில்லன்களாகக் காட்டி இவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் மனங்களில் பதிய வைப்பதற்கு இந்தப்பாழாய்ப்போன ஹாலிவுட் படங்கள் பெரும் உதவி புரிந்துள்ளன.

இந்த மாதிரிப்படங்களை உருவாக்குவது ஏதோ எதேச்சையாக நடப்பது அல்ல; அது ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலாக திட்டம் போடப்பட்டு அச்சுப்பிசகாமல் அரங்கேற்றப்படுகின்றன என்கிறார் ஜாக் ஷஹீன். குறிப்பாக இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்று ஜாக் ஷஹீன் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.அந்த இரண்டு தயாரிப்பாளர்கள் மெனாச்செம் கோலன்(Menachem Golan)யோரம் குளோபஸ்(Yoram Globus). 1982 இல் குளோபஸ் இஸ்ரேலின் திரைப்படத்துறைக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்று சொல்லும்பொழுதே இவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்கு விளங்கிவிடும்.
இஸ்ரேலில் தயாரிக்கப்படும் அத்தனை படங்களையும் இந்த திரைப்படத்துறைதான் கண்காணித்து வருகின்றது.

குளோப‌ஸ்ஸும்,கோல‌னும் இணைந்து அமெரிக்காவில் "கேனான்" என்ற‌ புக‌ழ்ப்பெற்ற‌ த‌யாரிப்பு நிறுவ‌ன‌த்தை உருவாக்கினார்க‌ள். இந்த‌ கேனான் நிறுவ‌ன‌ம் அர‌புக‌ளை வில்ல‌ன்க‌ளாக‌ சித்த‌ரித்து ச‌ளைக்காம‌ல் 26 ப‌ட‌ங்க‌ளை த‌யாரித்துள்ள‌து. இந்த‌ப்ப‌ட‌ங்களைக் காண்போர் அர‌புக‌ளைக்க‌ண்டால் காறி உமிழும் வ‌ண்ண‌ம் வெறுப்பை உண்டாக்கும் ப‌ட‌ங்க‌ள் இவை.
கேனானின் Hell Squad(1985) என்ற‌ ப‌ட‌த்தில் அமெரிக்க‌க்க‌ட‌ற்ப‌டையின‌ர் வில்ல‌ன்க‌ளாகச் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ளை கொன்றொழிப்பார்க‌ள். அதே போல் The Delta Force(1986), Killing Streets(1991) ஆகிய‌ கேனான் த‌யாரிப்புப் ப‌ட‌ங்க‌ளிலும் ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் கொன்றொழிக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஜாக் ஷஹீன் இன்னொரு அதிர்ச்சிகர உண்மையையும் தன் ஆய்வில் கண்டுபிடித்தார். அரபுகளை மோசமாக சித்தரிக்கும் படங்களின் தயாரிப்புகளில் அமெரிக்க இராணுவம் நேரடியாக ஈடுபடுகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சிகர உண்மை.
2000 ல் வெளியான‌ Rules of Engagement என்ற‌ ப‌ட‌ம் அமெரிக்க‌ இராணுவ‌த்திற்கும்,அமெரிக்க‌ க‌ப்ப‌ற்ப‌டை வீர‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி சொல்கிற‌து.
இதேபோல் 14 ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ப்பாதுகாப்புப் ப‌டைக்கு ந‌ன்றி சொல்கின்ற‌ன‌.தேவையான கருவிக‌ள்,ஆட்க‌ள், தொழில்நுட்ப‌ உத‌விக‌ள் செய்துத‌ந்த‌த‌ற்காக‌ இந்த‌ப்ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ப்பாதுகாப்பு ப‌டைக்கு ந‌ன்றி சொல்கின்ற‌ன‌.இவைய‌னைத்திலும் அமெரிக்க‌ர்க‌ள் வில்ல‌ன்க‌ளான‌ அர‌புக‌ளைக் கொன்றொழிப்பார்க‌ள்.

அர‌புக‌ளை மோச‌மாக‌ சித்த‌ரிக்கும் ப‌ட‌ங்க‌ளான‌ True Lies(1994), Executive Decision(1996),Freedom Strike(1998)ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளுக்கு அமெரிக்க‌ ராணுவ‌ த‌லைமைய‌க‌மான‌ பென்ட‌க‌னே உத‌வி செய்துள்ள‌து.அதே போல‌ அர‌புப் பெண்க‌ளையும் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் இர‌ண்டாந்த‌ர‌ப் பெண்க‌ளாக‌, த‌ர‌ங்கெட்ட‌வ‌ர்க‌ளாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌ன‌ என்று ஜாக் ஷ‌ஹீன் கூறுகிறார். இடுப்பைகுலுக்கி ஆடும் முகத்திரை அணிந்த பெண்களாகவும்,மெல்லிய அரைகுறை ஆடைகள் அணிந்த ஆபாசப்பெண்களாகவும் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.Sheltering Sky(1990),saadia(1953),Beast of Morocco(1966) போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.

Leopard Women(1920),Night Hawks(1981) ஆகிய படங்களில் அரபுப்பெண்கள் மேலை நாட்டினரைக்கொல்வதற்காக குண்டுகளைத் தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு அலையும் கொடூரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஜாக் ஷஹீன் ஆராய்ந்தார்.அரப் இஸ்ரேல் மோதல்,பேராசை,The Mummy போன்ற படங்கள் கோடி கோடியாக சம்பாதித்துக்கொடுத்தன.திரைப்படங்கள் பற்றிய நடுநிலையான, கடுமையான விமர்சனங்கள் இல்லாமை,பொதுமக்கள் காட்டும் அமைதி,முஸ்லிம்கள் ஹாலிவுட் களத்தில் அதிகம் இல்லாமை ஆகியவைகள் அவர் ஆய்வில் கண்டுபிடித்த காரணங்களில் சில."உண்மையான ஆர்வமிக்க இளம் திறமையாளர்கள் முன் வரவேண்டும்.அவர்கள் அரபுகளைப்பற்றிய தவறான கருத்துக்களை களையும் வண்ணம் நல்ல தரமான படங்களை தயாரிக்கவேண்டும்".என்று ஜாக் ஷஹீன் கூறுகிறார். ஆம் முஸ்லிம்க‌ள் திரைப்ப‌ட‌ம் என்னும் வ‌லிமையான‌ ஊட‌க‌ ஆயுத‌த்தை கையில் எடுக்க‌வேண்டும்.
அத‌னைஇஸ்லாமிய‌ப்ப‌டுத்த‌வேண்டும்.ஆபாச‌ம்,வ‌ன்முறை,ஒருதலைப்ப‌ட்ச‌ம்,ஒரு த‌லைமுறையையே அழிக்கும் வ‌ண்ண‌ம் ம‌றைமுக‌ப் பிர‌ச்சார‌ம் என்று அனைத்து அக்கிர‌ம‌ங்க‌ளும் இல்லா ஒரு புதிய‌ திரையுல‌கை உருவாக்க‌வேண்டும்.இதுதான் இப்போதைய‌ தேவை.
க‌ட்டுரையாள‌ர்:MSAH
Source:The Gulf Today May 15,2008.
Thanks:Vidiyal Velli Monthly July,2008.