இஸ்ரா-மிஃராஜோடு தொடர்புடையதுதான் ஃபலஸ்தீன் பூமியிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா.இஸ்ரா மிஃராஜை நினைவுக்கூறும் இந்த மாதத்தில் அதனோடு தொடர்புடைய மஸ்ஜிதுல் அக்ஸாவையும் நாம் நினைவுக்கூறுவது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் மஸ்ஜிதுல் அக்ஸா என்றழைக்கப்படும் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. மஸ்ஜிதுல் அக்ஸாவும் அதன் சுற்றுப்புறங்களும் பரக்கத் செய்யப்பட்டுள்ளது என்று அல்லாஹ் தனது திருகுர் ஆனில் குறிப்பிடுகிறான். (பார்க்க அல்குர் ஆன்17:1).
மேலும் இது முஸ்லிம்கள் நன்மைக்கருதி பயணம் செல்லும் மஸ்ஜிதுகளில் ஒன்று. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மஸ்ஜிதுல் அக்ஸா இன்று இஸ்லாத்தின் எதிரிகளான யூத சியோனிஸ்டுகளின் கையில் உள்ளது. அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் இந்த பைத்துல் முகத்தஸை மீட்பதற்காக செய்யும் தியாகங்கள் எண்ணற்றவை. உமர்(ரலி...), ஸலாஹுத்தின் அய்யூபி(ரஹ்...) போன்ற இஸ்லாமிய இலட்சிய தலைவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் இன்றைய நவீன காலத்திலும் தொடரத்தான் செய்கிறது. இந்தப்போராட்டத்தை நவீனகாலத்தில் வீரியத்துடன் எடுத்துச்செல்லும் இஸ்லாமிய இலட்சியக்குழுமமான எகிப்திலும்,ஃபலஸ்தீனிலும் வாழ்ந்த இன்றும் போராடிக்கொன்டிருக்கின்ற முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இலட்சியவீரர்களின் வரலாற்றை இங்கு நினைவுக்கூறுவதற்காக இலங்கையிலிருந்து வெளிவரும் மீள்பார்வை என்ற இதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு பதிவுச்செய்கிறோம்.
கட்டுரையை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.