10/7/09

இஸ்ரேல் எழுப்பிய மதில் சுவரை இடிக்க ஐ.நா வலியுறுத்தல்

0 கருத்துகள்

ஜெருசலம்: சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பிரிவினை மதிலை தகர்க்கவேண்டுமென்ற சர்வதேச நீதி நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச சட்டங்களை பேணாமல் இஸ்ரேல் கட்டிய மதில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக ஜெருசலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலர் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதலை தடுப்பதற்கு என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு மேற்குக்கரையை ஃபலஸ்தீன் பூமியிலிருந்து தனிமைப்படுத்த இஸ்ரேல் இந்த மதிலை கட்ட ஆரம்பித்தது. மதிலை சுற்றிலும் கிடங்குகளும் மின்சார கம்பிகளும் இருப்பதால் அங்குள்ள மக்களுக்கு வெளி உலகத்தோடு தொடர்புக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. 2004இல் சர்வதேச நீதிக்கான நீதி மன்றம் மதில் சுவரை எழுப்புவதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை அலட்சியப்படுத்திவிட்டு இஸ்ரேல் மதில் சுவர் கட்டும் பணியைத்தொடர்ந்தது. இதுவரை மதிலின் 3‍இல் 2 பாகம் பூர்த்தியாகிவிட்டது. மதில் சுவர் கட்டும் பணி பூர்த்தியாகும்பொழுது 35 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் தனிமைப்படுத்தப்படவும், ஒன்றேகால் லட்சம் ஃபலஸ்தீனர்கள் 3 பிரதேசங்களில் பிரிக்கப்படவும்செய்வார்கள். ஃபலஸ்தீனர்களின் சுதந்திரத்தின் மீது இஸ்ரேல் அரசு நடத்தும் கடுமையான கட்டுப்பாடுகள்தான் அடிப்படையான பிரச்சனை. ஆதலால் மதில் சுவரை உடனே தகர்க்கவேண்டும் என்றும் மதில் சுவரை கட்டியதால் பாதிப்படைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டுமென்றும் வலியுறுத்திய ஐ.நா ஹைக்கமிஷனர் நவநீதம் பிள்ளை நீதி மன்ற உத்தரவை செயல்படுத்த உலகநாடுகள் இஸ்ரேலை நிர்பந்திக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.