20/7/09

பெனாசி பூட்டோ கொலையின் பின்னணியில் டிக்செனி?

0 கருத்துகள்

மாஸ்கோ: முன்னாள் பாக்.பிரதமர் பெனாசிர் பூட்டோவைக்கொன்றது அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக்செனியின் கட்டுப்பாட்டிலிலுள்ள ரகசிய கொலையாளிகள் குழு என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை வெளிப்படுத்தியவர் ரஷ்யா டுடே என்ற தொலைக்காட்சி சானலின் செய்தியாளர் வெய்ன் மாட்ஸன். அங்கோலா நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஜானஸ் ஸாவாபியும் இவ்வாறு கொலைச் செய்யப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் ஸ்பெஷல் ஆபரேசன் கமான்டின் கீழ் தான் இந்தரகசிய‌க்கொலைக்குழுவை பாதுகாத்துவந்தார் செனி. சி.ஐ.ஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனடின் நேரடிக்கட்டுப்பாட்டில் செயல்பட்ட குழுவிற்கு அடுத்ததாக இது செயல்பட்டுவந்தது. தனி நபர் கொலைதான் இரண்டுக்கொலைக்குழுவின் லட்சியம். பெனாசிர் பூட்டோவைக்கொன்றது டிக்செனியின் குழு என்று சந்தேகிப்பதாக சி.ஐ.ஏ வின் சில அதிகாரிகளே கூறியிருந்தனர். தன்னுடைய உற்ற நண்பராகிய முஷாராஃபின் பதவியை நிலைநிறுத்துவதற்கு பெனாசிர் அரசியலை விட்டு வெளியேறவேண்டும் என்று டிக்செனி விரும்பியிருந்தார். பெனாசிர் கொலைச்செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருடைய தொலைபேசி உரையாடலை டிக் செனியின் கொலைக்குழு ஒட்டுக்கேட்டுள்ளது. இவ்வாறு மாட்ஸன் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
மேலும்இச்செய்தியைப் பற்றி அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.