பீஜிங்: ஜின்சியாங்கின் தலைநகராகிய உரூம்கியில் ஏற்பட்ட கலவரத்திற்கிடையில் 12 உய்கூர்களை போலீஸ் சுட்டுக்கொன்றதை அம்மாகாண கவர்னர் நூரி பெக்ரி ஒப்புக்கொண்டுள்ளார்.
எச்சரிக்கையாக துப்பாக்கியால் சுட்டபிறகு கலவரக்காரர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர் தெரிவித்தார். ஆனால் கொல்லப்பட்ட இதர உய்கூர்களைப்பற்றி அவர் எத்தகவலையும் தெரிவிக்கவில்லை. போலீஸ் மிகுந்த கட்டுப்பாட்டை கடைபிடித்ததாக கூறுகிறார் பெக்ரி.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன் அரசு வெளியிட்ட அறிக்கையில் 184 பேர்கள் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.