கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று மைசூரில் பள்ளிவாசல் காம்பவுண்டில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் அபாண்டமாக குற்றம் சுமத்தி 200 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததைக்கண்டித்தும் அவர்களை உடனே விடுதலைச்செய்யக்கோரியும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கர்நாடகா காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.இதில் பாப்புலர் ஃபிரண்ட் மாநிலத்தலைவர் கே.அப்துல்லத்தீப் மற்றும் பொதுச்செயலாளர் அஃப்ஸர் பாஷா ஆகியோரும் அடங்கும். கைதுச்செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலைச்செய்யப்படவில்லை. இச்சம்பவத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
செய்தி ஆதாரம் :Twocircles
shall practice all religion cooperation.especially between hindus n muslims.its very important.