12/7/09

பாபர் மசூதி இடிப்பு வழக்கு பைல்கள் மாயமானது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாயாவதி பரிந்துரை

0 கருத்துகள்
இந்தியாவை உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான தகவல் பத்திரிக்கைகள் காணாமல் போனதை பற்றி விசாரிக்க சிபிஐ விசாரணை நடத்த உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி பரிந்துரை செய்துள்ளார்.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
17 ஆண்டுகளுக்கு பிறகு இது தொடர்பான லிபரான் விசாரணை குழு மத்திய அரசிடம் சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான 23 பைல்கள் மாயமாகி உள்ளன. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்த பைல்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:- பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக 23 பைல்கள் மாயமாகி இருப்பது சாதாரண விஷயம் இல்லை. எனவே எனது அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்துள்ளது. இவ்வாறு மாயாவதி கூறி உள்ளார்.
பைல்கள் காணாமல் போனது தொடர்பாக நேற்று முன்தினம் உள்துறை இலாகா போலீசில் புகார் செய்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.