13/7/09

ஓரினச்சேர்க்கைக்கு எதிராக புதிய சட்டம் தேவை:முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்

0 கருத்துகள்
கோழிக்கோடு:ஒரினச்சேர்க்கைக்கு எதிரான இந்தியத்தண்டனைச்சட்டம் 377வது பிரிவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச்செய்த சூழலில் ஒரினசேர்க்கைக்கு எதிராக புதியச்சட்டம் கொண்டுவரவேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் மேலும் ஒரினச்சேர்க்கைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எல்லா மத தலைவர்களையும் உட்படுத்திய பிரச்சாரம் மேற்க்கொள்ளப்போகதாகவும் வாரியத்தின் துணைப்பொதுச்செயலாளர் மவ்லானா முஹம்மது அப்துற்றஹீம் குரைஷி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.டெல்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது.ஒரினச்சேர்க்கை மத போதனைகளுக்கு மட்டுமல்ல மனித ஒழுக்கவாழ்வுக்கும் எதிரானது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தலையிடக்கோரும் மனுவை சமர்ப்பிப்பது உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் தீர்மானிக்கப்படும், என்று அப்துற்றஹீம் குறைஷி கூறினார்.மேலும் அவர் கூறுகையில்,"ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான நீதி மன்ற தீர்ப்பைக்குறித்து மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இப்பிரச்சனையில் மனித ஒழுக்கத்திற்கு ஏற்ற விளக்கத்தை தெரிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு சம்பந்தமான லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு உடனே பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கவேண்டும். அதிக கால அளவை எடுத்து கமிஷன் கண்டறிந்த உண்மைகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது அரசின் கடமை.
விமானப்படை உள்ளிட்ட ராணுவப்படைகளிலும் அரசு பணிகளிலும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ள சட்டக்கட்டுப்பாடு ஏற்படுத்துவதை தடுக்கவேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.தாடி வைத்திருப்பதால் சில முக்கிய துறைகளில் முஸ்லிம்களை நியமிப்பதற்கு தடை ஏற்படுத்துபவர்கள் சீக்கிய சமுதாயம் உள்ளிட்ட பிறருக்கு இத்தடையை ஏற்படுத்துவதில்லை. மதரசாக்களை கட்டுப்படுத்துவதற்காக தனியாக துறை ஆரம்பிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியை அனுமதிக்கமாட்டோம். மத்ரஸாக்கள் முழுக்க முழுக்க சமுதாய ஸ்தாபனங்கள். அதில் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை".இவ்வாறு குரைஷி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.