13/7/09

பாப்ரிமஸ்ஜித்:ஆதாரங்கள் காணாமல் போனது வழக்கை பாதிக்காது ஸஃபர்யாப் ஜீலானி

0 கருத்துகள்
பாப்ரிமஸ்ஜித் வழக்கோடு சம்பந்தப்பட்ட 23 கோப்புகள் காணாமல் போனது அலஹபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சில் நடைபெறும் பாப்ரிமஸ்ஜித் உரிமைக்கோரும் வழக்கை பாதிக்காது என்று இவ்வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார்.
அவர் கோழிக்கோட்டில் நடைபெறும் முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். பாப்ரி மஸ்ஜிதிலிருந்து ராமனின் சிலைகளை மாற்றவேண்டும் என்று உத்தரவிட்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உ.பி. முதல்வர் ஜி.பி. பந்திற்கு எழுதுய கடிதமும், மஸ்ஜிதிலிருந்து விக்கிரகங்களை மாற்றுவது சாத்தியமல்ல என்று அன்றைய பைசாபாத் மாவட்ட நீதிபதியாக இருந்த கே.கே. நாயர் உ.பி. உள்துறைக்கு எழுதிய கடிதமும் உள்ளிட்ட கோப்புகளுக்கு வரலாற்று முக்கியத்துவமே உள்ளதே தவிர அது பாப்ரிமஸ்ஜித் உரிமை கோரும் வழக்கை பாதிக்காது. மேலும் லிபர்ஹான் கமிஷன் அறிக்கையில் உள்ள விஷயங்களும் பாப்ரி மஸ்ஜித் வழக்கை பாதிக்காது, ஏனெனில் அது பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பந்தப்பட்டது என்று ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.