ஸ்ரெப்ரெனிகாவில் கூட்டுக்கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம்களில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட 534 நபர்களின் உடல்கள் சம்பவம் நடந்து 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அடக்கம்செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 8100 போஸ்னியா முஸ்லிம்களை 1995 ஆம் ஆண்டு செர்ப் கிறிஸ்தவ வெறியர்கள் ஸ்ரெப்ரெனிகா நகரத்தில் கொன்று ஒன்றாக குழியில் போட்டு மூடினர். இதுவரை 5000 உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது.
போஸ்னிய முஸ்லிம்களின் தீரா துக்கத்தின் சின்னமாக விளங்கும் ஸ்ரெப்ரெனிகா நிகழ்வின் நினைவாண்டில் நடைப்பெற்ற அடக்க நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கிழக்கு போஸ்னியாவில் போட்டாகாரி நினைவு கப்ரஸ்தானில் அடக்க நிகழ்ச்சி நடந்தது.1995ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் நாள்தான் செர்ப் ராணுவம் போஸ்னியாவை ஆக்கிரமித்தது. டச்சு மற்றும் ஐக்கியநாடுகள் சபை படைகள் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொன்டிருக்க இப்படுகொலை அரங்கேறியது.
14 முதல் 72 வயதுவரையுள்ள நபர்களின் உடல்பகுதிகளைத்தான் நேற்று முன் தினம் அடக்கம் செய்தது. இரண்டாமதொரு பெரிய குழியிலிருந்து இவைகள் கண்டெடுக்கப்பட்டது. ஆதாரங்களை இல்லாமலாக்க செர்ப் ராணுவம் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து மாற்றி வேறொரு இடத்தில் புதைத்துள்ளனர். ஹேகில் உள்ள சர்வதேச நீதிக்கான நீதி மன்றம் இதனை இனவெறியாக பிரகடனப்படுத்தியது. முன் செர்ப் தலைவன் ரதோவான் கராஜிச் ஹேகில் இனவெறிக்குற்றத்திற்காக விசாரணையை சந்திக்கிறான். முஸ்லிம்களுக்கெதிராக செர்ப் ராணுவத்தை வழிநடத்திய ஜெனரல் ராத்கோ மிளாதிச் தலைமறைவில் உள்ளான். மிளாதிச் செர்பியாவில்தான் உள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் வெளிவந்தது.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்
ithu pondra padukolaikalai intha news mulama than theriyamudiyuthu. nalla oru site, i need sorry we need related article for this news is it possible. thank u