13/7/09

காஷ்மீர் பெண்கள் பலாத்கார கொலை ஆதாரங்கள் அழிப்பு

1 கருத்துகள்
காஷ்மீர் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலைக்கு உள்ளான சம்பவத்தில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. எனவேதான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று விசாரணைக் கமிஷன் நீதிபதி கூறியுள்ளார்.
காஷ்மீரில் ஸ்ரீநகர் அருகே உள்ள ஷோபியன் நகரில் பழத்தோட்டத்துக்கு சென்ற நிலோபர் (22) அவரது மைத்துனி அசிவா (17) ஆகிய இரு இளம் பெண்களும் பாதுகாப்பு படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த மாதம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முஷாபர் அகமது ஜன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மாநில அரசு அமைத்தது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணைக் கமிஷன் நீதிபதி முஷாபர் அகமது ஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது "முக்கிய குற்றவாளியே இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனவே விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டதன் நோக்கம் தோற்று விட்டது. ஆதாரங்களை யாரும் உருவாக்க முடியாது. தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் விசாரணை அதிகாரிகள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். எனவே தான் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. விசாரணை அதிகாரிகள் 60 சாட்சியங்கள் கொண்ட அறிக்கையை அளித்து இந்த வழியில் விசாரணையை நடத்தலாம் என்று கூறியுள்ளனர். இந்த அறிக்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை". இவ்வாறு நீதிபதி முஷாபர் அகமது கூறினார்.

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.