13/7/09

சிறையில் தன்னை முறையாக நடத்தவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சாமியாரிணி பிரக்யா சிங் மிரட்டல்!

2 கருத்துகள்
சிறையில் தன்னை முறையாக நடத்தவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான பிரக்யா சிங் தாகூர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறைத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தன்னை முறையாக நடத்தவில்லை என்றும் இந்நிலை தொடர்ந்தால் பைகுல்லா சிறையில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் ஜூலை 11ஆம் தேதியிட்டு பத்திரிகையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது தன்னை ஜெ.ஜெ. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவசர ஊர்தியில் அழைத்துச் செல்லாமல், காவல்துறை ஜீப்பிலேயே அழைத்துச் சென்றனர் என்று அவர் குற்றம் சுமத்தினார்.
அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகள் முக்கியப் புள்ளிகளைப் போன்று மருத்துவ சிகிச்சைகள் பெறும்போது, இந்துத்துவ சிந்தனைக்காக தாகூரைத் தண்டிப்பது ஆச்சர்யமாக உள்ளது என்று சாத்வியின் வழக்கறிஞர் நவீன் சோமல் கூறியுள்ளார்.

2 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.