21/7/09

சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்

0 கருத்துகள்
கடந்த இரு ஆண்டுகளாக தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் புகார்கள் குவிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருப்பதாவது:தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையத்தில் கடந்த இரு ஆண்டுகளாக புகார்கள் குவிந்து வருகின்றன. சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2007-08ல் ஆயிரத்து 508 புகார்களும், 2008-09ல் 2,250 புகார்களும் குவிந்துள்ளன. 2009-10ம் ஆண்டில் கடந்த ஜூன் 30ம் தேதி வரை 472 புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து, தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால், உரிய நபர்களுக்கு தாக்கீதும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.