முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமை அவருடைய மதிப்பை கருத்தில் கொள்ளாமல் அவமானப்படுத்தும் விதத்தில் டெல்லி விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இது போன்ற சம்பிரதாயங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கும். அவர்களுக்கு இந்தியாவில் எங்கு போனாலும் பாதுகாப்புச் சோதனை விலக்கு உண்டு.இவ்வாறான ப்ரோடோகால் விதிமுறைகள் இருக்க, எவ்வாறு இவ்விதி, அதுவும் நாட்டின் தலைநகரிலேயே மீறப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.
இதனைச்செய்தது அமெரிக்காவைச்சார்ந்த கான்டினன்டல் ஏர்லைன்சின் ஊழியர்கள்.மேற்க்கண்ட விமானத்தின் ஊழியர்கள் இதற்கு மன்னிப்புக்கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் எழுத்துமூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கு முன் முன்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் இவ்வாறு சோதனைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது சரி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்க்கொண்ட அமெரிக்க அரசு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனைச்செய்தால் நிலைமை என்னவாகும் என்று கற்பனைச்செய்துப்பாருங்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
next time push vanthal avana nirvanamakki aanchidalam
push mattum illa americavilirunthu evan vanthalum koyala orinchu vittu check pannanum