21/7/09

இஸ்ரேல் ராணுவத்தால் அப்பாவி சிறுவன் கடத்தி சுட்டுக்கொலை - காஸாவில் தொடரும் சியோனிஷ பயங்கரவாதம்!

0 கருத்துகள்
ஃபலஸ்தீன் மருத்துவக் குழு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காசாவின் வடக்கு எல்லை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில்
ஞாயிற்றுக்கிழமை 15 வயது சிறுவன் ஒருவனை இஸ்ரேலிய இராணுவம் கடத்தி சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கிறது.
ஆனால் இஸ்ரேலிய இராணுவம் கூறுகையில் அச்சிறுவன் காசாவின் எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முற்ப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் சப்தமிட்டு எச்சரித்தும் நுழைய முற்ப்பட்டதால் சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்தது. அச்சிறுவனை மருத்துவமனைக்கு ராணுவம் அழைத்து வரும் போது அவனுடைய மார்பில் பல துப்பாக்கி தோட்டாக்கல் துழைத்து இருந்ததாகவும் அழைத்து வந்த சிறிது நேரத்தில் இறந்ததாகவும் பெ எர் ஷெவாவில் அமைந்திருக்கும் சூராக்கா மருத்துவமனை மையம் இதனை தெரிவித்தது. இஸ்ரேலிய ராணுவம் அச்சிறுவனை இன்று அதிகாலை ஃபலஸ்தீன் எல்கை பகுதி எரெஸ் வாயிலாக ஃபலஸ்தீன் அரசிடம் ஒப்படைத்தது. இஸ்ரேலின் இது போன்ற அடாவடிதனங்கள் தொடர்கதையாகிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

source: IMEMC


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.