மத்தியபிரதேஷ் மாநிலம் உஜ்ஜயினில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய ஹெச்.எஸ்.சபர்வாலை கொலைச்செய்த வழக்கில் கைதுச்செய்யப்பட்ட 6 ஏ.பி.வி.பி உறுப்பினர்களை நீதி மன்றம் விடுதலைச்செய்தது.
குற்றம் சுமத்தப்பட்டோருக்கு எதிராக அரசு தரப்பு போதிய ஆதாரங்களை திரட்டுவதில் தோல்வியை சந்தித்துள்ளது என நாக்பூர் செசன்ஸ் நீதிபதி நிதின் தல்வி கூறினார். ஆனால் இவ்வழக்கில் கைதுச்செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 2008 ஆகஸ்ட் மாதத்தில் மாதவ் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் ஏற்பட்ட தகராறைத்தொடர்ந்து ராஷ்ட்ரதந்திரசாஸ்திர அமைப்பின் தலைவராக இருந்த பேராசிரியரை ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி யைச்சார்ந்தவர்கள் அடித்துக்கொன்றனர்.
பா .ஜ.க ஆளும் மத்தியபிரதேசில் தங்களுக்கு நீதி கிடைக்காது ஆதலால் இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும் எனக்கோரி சவர்வாலின் மகன் ஹிமான்சூவின் மனுவை பரிசீலித்த உச்ச நீதமன்றம் வழக்கை மஹராஷ்ட்ரா மாநிலம் நாக்பூருக்கு மாற்றியது. வழக்கை நாக்பூருக்கு மாற்றியபொழுதே இக்கொலைக்கான ஆதாரங்கள் அனைத்தும் இல்லாமல் போனது என பப்ளிக் பிராஸிக்கியூட்டர் பிரபுல் சாந்தில்யா கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் காவல்துறை அரசுக்கு ஆதரவாக விசாரணை நடத்தியது என்றார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போவதாக அவருடைய மகன் ஹிமான்சு கூறினார். காவல்துறையினர் வாக்குமூலத்தை மாற்றக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடப்பில் இருக்கவே இவ்வழக்கில் அது நிகழ்ந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். இவ்வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸைச்சார்ந்த அபிசேக் சிங் கூறுகையில் இவ்வழக்கு தோல்வியுற மத்தியபிரதேஷ் அரசின் அணுகுமுறைதான் காரணம் எனக்கூறினார். பா.ஜ.க அரசுக்கெதிராக சபர்வாலின் மகன் குற்றஞ்சாட்டியது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண வழக்கல்ல கேமாராக்களுக்கு முன்பு மாணவர்கள் ஒரு பேராசிரியரை கொலைச்செய்த சம்பவம் இது. இவ்வளவு தெளிவாக ஆதாரம் இருந்தும் தீர்ப்பு இவ்வாறு வெளிவந்ததற்கு காரணம் அரசு தரப்பின் சதியாலோசனைதான் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
News source: thejas malayalam daily
டெஹல்கா ரிப்போர்டில் நாங்க தான் மோடியோட தூன்டுதலில் எல்லா கொலைககள் எல்லா அக்கிரமங்கலையும் செஞ்சோம்னு தெலிவாக சொன்னதுக்கப்புரமும் இந்த அரசல் ஒன்னும் பன்னமுடியல..இந்த சாட்சிய அலிக்கிரது எம்மாத்திரம்...இப்ப ஜட்ஜ் எல்லாம் அவாலா ஆயிட்டா