புதுடெல்லி: தீவிரவாதத்தை எதிர்க்கொள்வதில் இஸ்ரேலின் முன்மாதிரியை பயில்வதற்கு மஹாராஷ்ட்ராவைச்சார்ந்த அரசு பிரதிநிதி சங்கம் ஒன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவிற்கு சென்றுள்ளது.
மும்பை போலீஸ் கமிஷனர் டி.சிவானந்தன், உள்துறை பொறுப்பு வகிக்கும் மஹாராஷ்ட்ரா துணை முதன்மை செயலர் சந்திர அய்யங்கார், இன்ஸ்பெக்டர் ஜனரல் பி.கெ.ஜெயின் ஆகியோர் இக்குழுவில் உட்படும்.
மும்பையில் தீவிரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இஸ்ரேல் பின்பற்றிவரும் திட்டங்களை பயில்வதும், இதற்காக இஸ்ரேலின் உதவியை உறுதிச்செய்வதும்தான் இக்குழுவின் நோக்கம். ஆக்கிரமிப்பு ஜெருசலம் சென்ற இக்குழுவினர் அங்கு பாதுகாப்பு செயல்முறைகளை பயின்றனர். இஸ்ரேல் போலீஸ் பயிற்சி முகாம்களையும் பார்வையிட்டனர். ஜெருசலம் போலீஸ் உயர் அதிகாரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் இக்குழு தொலைத்தொடர்பு சங்கேத வார்த்தைகள் சம்பந்தமாக இஸ்ரேல் எக்ஸ்போர்ட் இன்ஸ்டிடியூட் நடத்தும் ஒரு கருத்தரங்கிலும் பங்கேற்கும். மும்பை தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேலுக்கும் மஹாராஷ்ட்ரா போலீசுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. கடந்த மாதம் மும்பையில் இஸ்ரேலில் பாதுகாப்பு சம்பந்தமான உபகரணங்களை தயார்செய்யும் பல்வேறு கம்பெனிகள் பங்கேற்ற கருத்தரங்கு நடைபெற்றது, இதைத்தொடர்ந்துதான் மஹாராஷ்ட்ரா காவல்துறை குழுவினர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தது.
News Source:Thejas Malayalam Daily
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.