தெஹ்ரான்: எகிப்தைச்சார்ந்த மர்வா அல் ஸெர்பினி என்ற முஸ்லிம் பெண்மணியை கோர்ட் வளாகத்தில் வைத்து கொலைச்செய்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ட்ரஸ்டன் நீதிமன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
நான்கு மாதம் கர்ப்பிணியான மர்வாவை அவருடைய மூன்று வயது மகனின் முன்னால் வைத்து 18 முறை கத்தியால் குத்திக்கொன்றதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது நீதி நியாய கட்டமைப்பின் மீது விழுந்த கரும்புள்ளியாக எக்காலமும் நிலைநிற்கும் என ஈரானின் நீதி நியாயத்துறைத்தலைவர் ஆயத்துல்லாஹ் மஹ்மூத் ஷெஹ்ரூது கூறினார்.
ஈரானின் சட்டத்துறையில் முதிர்ந்த அதிகாரிகளை வாழ்த்தும் நிகழ்ச்சியொன்றின்போது இதனை குறிப்பிட்டார் ஷெஹ்ரூதி. மர்வாவின் உயிரை காப்பாற்ற முடியாதது மட்டுமல்ல அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய கணவர்மீது துப்பாக்கியால் சுட்டுள்ளது பாதுகாப்புபடை என்று குற்றஞ்சாட்டினார் ஷெஹ்ரூதி.
ஹிஜாப் அணிந்ததின் பேரில் தீவிரவாதி என்று அவதூறாக பேசி அவமானப்படுத்தியதைத்தொடர்ந்து நீதி மன்றத்தில் வழக்குத்தொடர்ந்த மர்வாவைத்தான் ஜெர்மனைச்சார்ந்த வெறிப்பிடித்த இளைஞன் அனைவரும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்க 18 முறை கத்தியால் குத்திக்கொலைச் செய்தான். இச்சம்பவம் முஸ்லிம் உலகை ஆவேசம் கொள்ளவைத்தது. ஜெர்மனியில் இனவெறிக்கு இடமில்லை எனக்கூறி இந்நிகழ்வை எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளினர் ஜெர்மன் ஆட்சியர். ஈரானில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி நடந்த போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நதா ஆகா சுல்தானின் மரணத்தை மேற்கத்திய மீடியாக்களும் ஆட்சியாளர்களும் பெரிதுப்படுத்தும் அதே நேரத்தில் மர்வாவின் மரணத்தில் மவுனம் சாதிப்பது அவர்களின் இரட்டை வேடத்தைக்காட்டுகிறது என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் குற்றஞ்ச்சாட்டினார். ஜெர்மனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நஜாத் ஐ.நா பதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.