17/7/09

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை?! சீக்கியர்கள் டர்பன் அணிய தடை இல்லை! - பிரான்ஸ் அரசின் பாரபட்சம்

0 கருத்துகள்


பிரான்சில் பள்ளிகளில் மத அடையாளங்களைத் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக பிரெஞ்சு அரசு இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபிற்கு தடை விதித்தநிலையில் பிரான்சில் வாழும் சீக்கிய மக்கள் தலைப்பாகை (டர்பன்) அணிய தடைவிதிக்கப்படாது என அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ்சர்கோஸி தெரிவித்துள்ளார்.
எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேய்க் நகரில் நடந்த அணி சேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசிய போது, சீக்கிய மாணவர்கள் டர்பன் அணிய தடைவிதிக்க பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருவது குறித்து அதிபர் சர்கோஸியிடம் விவாதித்தாகவும், இப்பிரச்சனைக்கான தீர்வு அடங்கிய கடிதத்தை தாம் அவரிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
எனினும்
, பிரான்ஸில்
டர்பன் அணிவதற்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் தமது அரசுக்கு இல்லை என அதிபர் சர்கோஸி தன்னிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரான்சில் உள்ள 6000க்கும் அதிகமான சீக்கியர்கள், பிரெஞ்சு அரசின் இந்தச் சட்டத்தை தீவிரமாக எதிர்க்கின்றனர். தங்களின் தலைப்பாகை மத அடையாளம் அல்ல; மாறாக தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.