அதிபர் மஹ்மூத் அப்பாஸிற்கெதிரான செய்தியை வெளியிட்டதற்காக அல்ஜஸீரா அரபு தொலைக்காட்சி நிறுவனம் ஃபலஸ்தீன் மேற்குகரையில் செயல்பட தடைவிதித்துள்ளனர் ஃபலஸ்தீன் அதிகாரிகள். மேலும் அல்ஜஸீராவிற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்போவதாக ஃபலஸ்தீன் செய்தி வெளியீட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஃபலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியை ஆளுவது மஹ்மூத் அப்பாஸ்தலைமையிலான ஃபத்ஹ் அரசு. இங்கு செயல்படும் அல்ஜஸீரா அரபுச்சானலுக்கு ஃபத்ஹ் கட்சியின் முதிர்ந்த தலைவரான ஃபாரூக் அல் கத்மி அளித்த பேட்டியில் 2003 இல் யாசிர் அராஃபத்தைக்கொலைச்செய்ய மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேலுடன் சேர்ந்து சதியாலோசனையில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். இந்த செய்தியை வெளியிட்டதற்குதான் அல் ஜஸீராவிற்கு தடை விதித்துள்ளது ஃபத்ஹ் அரசு.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.