அல்ஜஸீரா அரபி மொழிச் செய்தித் தொலைக்காட்சிக்கு விதித்திருந்த தடையை பாலஸ்தீன அரசு நீக்கியுள்ளது. முன்னதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மீது குற்றம் சுமத்தி அப்பாஸின் எதிர் தரப்பைச் சேர்ந்தவரான பாலஸ்தீன அரசியல்வாதி பாரூக் கதூமி என்பவர் பேசியதை அல்ஜசீரா அரபிச் செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டதைத் தொடர்ந்து அதன் ஒளிபரப்புக்கு மேற்குக்கரைப் பகுதியில் தடை விதிக்கப்பட்டது.
அல்ஜசீரா தொலைக்காட்சியில் பரபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தற்போதைய பாலஸ்தீன் அதிபர் அப்பாஸின் எதிர் தரப்பைச் சேர்ந்தவரான பாரூக் கதூமி என்பார், மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேலுடன் சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டு முந்தைய அதிபர் யாசர் அரபாத்தைக் கொலை செய்து விட்டதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டிற்குத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாகக் கூறி முந்தைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனுக்கும் மஹ்மூத் அப்பாஸுக்கும் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தை ஆவணங்களையும் அப்போது அவர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பாலஸ்தீன அரசிடமிருந்து அல்ஜசீரா தொலைக்காட்சிக்குத் தடை உத்தரவு வழங்கப்பட்டது. பாரூக் வெளியிட்ட ஆவணங்கள் போலியானவை என ஃபத்தாஹ் கட்சி மேலிடம் அறிக்கை வெளியிட்டது.
பின்னர் இன்று இத்தடை விலக்கப்பட்டதாக அல்ஜசீராவுக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அல்ஜசீரா மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.