20/7/09

மீண்டும் ஒரு ர(த்)த யாத்திரை அத்வானி திட்டம்

0 கருத்துகள்


நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, இன்னும் அதிலிருந்து மீளவில்லை. தோல்வியையடுத்து, மேல்மட்ட தலைவர்களுக்கு இடையேயான உட்கட்சி பூசல். இதிலிருந்து மீள தனது பிரபலமான ஆயுதமான "யாத்ரா' வை தூசி தட்டி பாஜகவிற்கு உயிரோட்டமளிக்க அத்வானி முடிவு செய்து இருக்கிறார்.
இதுகுறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், இந்த யாத்ரா பிரச்சாரமாக இல்லாமல், கட்சியின் அடிமட்ட தொண்டனை ஊக்குவிக்கும் வகையில் இருக்குமென தெரிகிறது. ஜனநாயக நாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம், ஆகவே அதிலிருந்து மீள்வதற்கான வழியை கண்டுபிடிக்கும் கட்டாயத்திற்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. பாஜக மீது கட்சியின் தொண்டர்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டுவதுதான் யாத்திரையின் நோக்கமாக இருக்கும் என அத்வானிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முன்பு இதுபோன்ற பல்வேறு (த்) யாத்திரைகளில் தனது முஸ்லிம் விரோத பேச்சுக்களின் மூலம் பாசிசவாதிகளை சூடேற்றி முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரங்களை தூண்டிவிட்டவர் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.