2/7/09

அபூகரீப் சிறையில் கைதியை சிலுவையில் அறைந்துக்கொன்ற சி.ஐ.ஏ -திடுக்கிடும் செய்தி

ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகு அங்கு அமெரிக்கா நிர்மாணித்த அபூகரீப் என்ற வெஞ்சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ ஒருகைதியை சிலுவையில் அறைந்துக்கொன்றதாக தி நியூயார்க்கர் என்ற பத்திரிகை இ‍ந்த குலை நடுங்கச்செய்யும் செய்தியை வெளியிட்டுள்ளது.
சிலுவை மாதிரியில் கை,கால்கள் மற்றும் நெஞ்சில் ஆணி அறைந்து பலகையில் கட்டியபின் மூச்சிதிணறி இறந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என செய்தியாளர் ஜேன் மேயர் குறிப்பிடுகிறார். சிலுவை மாதிரியில் கொல்லப்பட்டதால் மரணித்தவரின் விலா எலும்புகள் முறிந்திருந்தன.இதனை பிரேதப்பரிசோதனை செய்த டாக்டர்கள் கொலை என்றுக்கூறியபொழுதும் இக்கொலைக்குக்காரணமான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஜேன் மேயர் குற்றஞ்சாட்டுகிறார்.
கொல்லப்பட்ட நபரின் விபரங்களோ அவர் கொல்லப்பட்ட தேதியோ இதுவரை வெளியிடப்படவில்லை.உடல் ரீதியான சித்திரவதைகள் மூலம் ஆஃப்கானிலும் ஈராக்கிலும் சிறைச்சாலைகளில் மட்டும் நூற்றுக்கணக்கான கைதிகள் கொல்லப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் ஃபர்ஸ்ட் என்ற அமைப்பு தெளிவுப்படுத்துகிறது.லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் ஜோன் ஹென்ட்ரன் என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ள செய்தி அறிக்கையில் அமெரிக்க ராணுவமும், சி.ஐ.ஏ வும் சேர்ந்து கொடூரமாக சித்திரவதைச்செய்துக்கொன்ற சிலரைப்பற்றிய தகவலை வெளியிட்டிருந்தார். அப்துல் ஜலீல் என்றகைதி வாய் பொத்தப்பட்டு கைகால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.ஈராக்கின் முன்னாள் விமானப்படை கமான்டரான ஆபித் மவ்ஹூ ஸ் மிருகத்தனமான சித்திரவதைகளால் நெஞ்சில் அழுத்தப்பட்டு மூச்சுதிணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.இம்மாதிரி சி.ஐ.ஏ சித்திரவதைச்செய்து கொலைச்செய்த 44 கைதிகளின் விபரங்கள் பென்டகனிலிருந்து தகவல் கேட்டுப்பெறும் உரிமை என்ற சட்டப்படி தங்களுக்குக்கிடைத்ததாக அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் தெரிவிக்கிறது.ஆனால் சி.ஐ.ஏ வின் சித்திரவதைக்கூடங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் யார் யார் எங்கெங்கு சித்திரவதைச்செய்யப்பட்டார்கள் என்ற விபரம் கிடைக்க வாய்ப்பு இல்லை என ஹியூமன் ரைட்ஸ் ஃபர்ஸ்டின் டாக்டர் நதானியேல் ரைமன்ட் கூறுகிறார்.
2007 மேமாதத்திற்கு முன்பு இம்மாதிரியாக ஈராக்கிலும் ஆஃப்கானிலும் 37 பேர் கொல்லப்பட்டதை பென்டகன் ஒப்புக்கொண்டிருந்தது.ரெட்க்ராஸ் போன்ற மனித உரிமை மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகளிடமிருந்து மூடி மறைப்பதற்காகத்தான் இந்த சித்திரவதை கூடங்களை ரகசியமாக வைத்துள்ளது அமெரிக்கா. சி.ஐ.ஏ வின் சித்திரவதைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த சூழலில் கைதிகளை விசாரணையில்லாமல் காலவரையற்று சிறையில் அடைப்பதற்கு அதிகாரமளிப்பதற்கு முயலும் அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்புக்கிளம்பியுள்ளது.ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை அப்படியே பின் தொடர்கிறார் ஒபாமா என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் செயல் இயக்குநர் கென்னத் ரோத் குற்றஞ்சாட்டுகிறார். பைபிளின் புதிய ஏற்பாடு கூறுவதின் படி யேசு கிறிஸ்து விசாரணைக்குப்பின்னர்தான் சிலுவையில் ஏற்றப்பட்டார்.ஆனால் அபுகரீப் சிறையிலோ ஒரு விசாரணையுமில்லாமல் கைதியை தூக்கிலேற்றியிருக்கிறது சி.ஐ.ஏ என்று கூறிக்கொண்டு ஜென் மேயர் தனது செய்தி அறிக்கையை நிறைவுச்செய்கிறார்.

News Source:Thejas Malayalam daily.