11/8/09

மாலேகான்'06 குண்டுவெடிப்பு- சிறையிலிருக்கும் அப்பாவிகள் மீதான தீவிரவாத தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி பிரதமருக்கு அப்பாவிகளின் மனைவிகள் கடிதம்

0 கருத்துகள்
மும்பை : " நீதியின் மேல் நம்ம்பிக்கை இன்னும் எங்கள் மனதில் உள்ளது " . என்று கூறும் மலேகோன் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்களின் மனைவிகள்; தங்கள் கணவர்களை MCOCA என்னும் தீவிரவாத சட்டத்திலிருந்து தங்கள் கணவர்களை நீக்குமாறு பிரதமருக்கும் , ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும், உள்துறை மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
இதன் மூலம் மட்டும் தங்கள் கணவர்களின் விடுதலை சாத்தியம் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
2006 செப்டெம்பர் 8 ல் முஸ்லிம்களின் ஸபெய்பராஅத் அன்று மாலேகானின் கப்ருஸ்தான் மற்றும் முஷவரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 31 பேர் இறந்தனர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் காரணமாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு காவல்துறை ( ATS ) 11 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது. இவர்கள் நிரபராதிகள் என்று கூறி தன்சீன் என்ற முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு 300 பக்க அறிக்கையை CBI வசம் ஒப்படைத்தது. அவர்கள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து , குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் மனைவிகள் ஜூன் 2009 இல் உள்துறை அமைச்சர் . சிதம்பரத்தை சந்தித்து CBI உடனடியாக அந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வலியுர்த்தினர். அதை ஏற்று கொண்ட சிதம்பரம் ஒரு வாரத்தில் CBI அறிக்கையை தாக்கல் செய்யும் என்று வாக்குறுதி அளித்தார் . ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
இந்த குண்டு வெடிப்பின் உண்மை குற்றவளிகளான இந்துத்துவ தீவிரவாதிகள் பெண் சாமியார் பிரக்யா சிங்க் , கலோனல் பிரசாத் ப்ரொஹித் மற்றும் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை சேர்ந்தவர்களை மகாராஷ்டிர ATS ன் தலைவர் ஹெய்மந்த் கர்கரே கண்டுபிடித்தார். ஆனால் அவர்களை நீதிமன்றம் கடந்த வாரம் MCOCA சட்டத்திலிருந்து விடுவித்தது . ஆனால் நிரபராதிகளன முஸ்லிம் இளைஞர்கள் கடந்த 3 வருடங்களாக சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
குற்றவாளிகள் மீது MCOCA சட்டம் நீக்கப்பட்டு விட்டது , ஆனால் நிரபராதிகள் மீது இன்னும் நீக்கப்படவில்லை என்பதால் அவர்களுடைய மனைவிகள் பிரதமருக்கும் , ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும், உள்துறை மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
source: Twocircles

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.