11/8/09

வீர விளையாட்டில்(martial arts) பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்

1 கருத்துகள்
ஜம்மு : பாங்காக் ல் நடந்த ஆசியாவின் முதல் வீர விளையாட்டு(martial arts) சாம்பியன்சிப் போட்டியில் ஜம்மு கஷ்மீரின் பெண் குல்-இ-சுர்கப் இரண்டு வெண்கல பதக்கம் வென்றார். ஆகஸ்ட் 1 முதல் 9 தேதி வரை நடந்த, 45 நாடுகள் பங்குபெற்ற ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சில் நடத்திய இந்த விளையாட்டு போட்டிக்கு ஆல் இந்திய ஜுஜித்சு ஒலிம்பிக் சங்கம் சார்பாக சுர்கப் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டார். இப்போட்டியின் பெண்களுக்கான டொ மற்றும் ஜுஜித்சு பிரிவில் தனி நபருக்கான போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றதின் மூலம் இப்போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுர்கப்.
பதக்கம் வென்ற பிறகு பேசிய சுர்கப் " இந்தியா சார்பாக உலக அளவில் என்னை விளையாடுவதற்கு வாய்பளித்த இந்திய ஜுஜித்சு ஒலிம்பிக் சங்கத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். சுர்கப் கஷ்மீரில் முதல் பிளாக் பெல்ட் பெற்ற பெண்மணி என்பது குறுப்பிடத்தக்கது.
source: Twocircles

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.