14/8/09

சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசா 2010ம் ஆண்டு வரை நீட்டிப்பு

0 கருத்துகள்
சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசா 2010ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாட்டில் ரகசியமாக வாழ்ந்து வரும் தஸ்லிமா கடந்த 6ம் தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய உளவுப் பிரிவினர் விமான நிலையத்திலிருந்து உடனடியாக ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவரது இந்தய விசா ஆகஸ்ட் 17ம் தேதி காலாவதியாகிறது. இந் நிலையில் அவர் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பித்தார்.இதையடுத்து இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரது விசாவை 2010 பிப்ரவரி 16ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் மேலும் 6 மாத காலம் விசா நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தாம் விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும், மீண்டும் ஜனவரியில் இந்தியா திரும்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று மின்னஞ்சல் மூலம் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமது விசா காலத்தை பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டித்த இந்திய அரசுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளவிருப்பதால் தாம் இம்மாதம் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும், அதன் பின் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியா திரும்புவேன் என்றும் தஸ்லிமா கூறியுள்ளார்.
என்னை தத்தெடுத்துள்ள இந்திய நாட்டில் வாழ்வதற்காக ஜனவரியில் இங்கு வருவேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.