14/8/09

இந்தியாவின் 62 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EIFF நடத்தும் ('Get Well Soon' Campaign) நிகழ்ச்சி

0 கருத்துகள்
இந்தியாவின் 62 வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று U.A.E யின் 7 அமீரகங்களிலும் சிறப்பாக கொண்டாட 'Emirates India Fraternity Forum' திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதி நிகழ்ச்சியாக மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்து , புண்பட்ட மனங்களுக்கு பூக்கள் மற்றும் பழங்கள் வழங்கி மேலும் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து அட்டைகளை வழங்கும் ("Get Well Soon" Campaign) நிகழ்ச்சிக்கும் ஏற்ப்பாடு செய்துள்ளது.
அமீரகத்தின் முக்கிய மருத்துவமனைகளில் அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் இந்நிகழ்ச்சியை EIFF நடத்தவிருக்கின்றது.
கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேலும் EIFF ன் பெண்கள் குழுவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ,பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் பிரிவுகளுக்குச் சென்று வாழ்த்துக்களை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி பற்றி EIFF வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.