15/8/09

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் 62‍வது சுதந்திர தின நல்வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது பாலைவனத்தூது.

0 கருத்துகள்


1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் நள்ளிரவில்தான் நம்முடைய தேசம் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டது.இந்த விடுதலையை நாம் பெறுவதற்கு ஏறத்தாழ நான்கரை நூற்றாண்டுகள் மிகப்பெரியதொரு போராட்டத்தை அந்நிய சக்திகளுக்கு எதிராக நடத்தினார்கள் தேசபக்தகளரான இந்திய குடிமக்கள்.
ஆக்கிரமிப்பை நோக்கமாகக்கொண்ட அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அஞ்சி செல்வத்தை அள்ளிக்கொடுத்து,அண்ட இடமும் கொடுத்து,அவர்கள் சுதந்திரமாக பவனி வர பாதையும் அமைத்துக்கொடுத்தவர்களின் வாரிசுகளெல்லாம் சுதந்திரமடைந்த இந்தியதேசத்தின் அரியணையில் அமரமுடிகிறது.அரசு பதவிகளை அலங்கரிக்க முடிகிறது.
ஆனால் சுதந்திரத்திற்காக பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்(29/12/1978,இல்லஸ்டிரேட் வீக்லி) இந்திய தேசத்தின் விடுதலைக்காக சிறைச்சென்றதிலும்,உயிர் நீத்ததிலும் தனது சதவீதத்திற்கு அதிகமாகவே முன்னணியில் நின்ற முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்த தேசத்தில் கிடைக்கும் பரிசோ என்கவுன்டர்கள்,இனப்படுகொலைகள்,தீவிரவாதப்பட்டங்கள்,நாட்டை துண்டாடியவர்கள் என்ற அவதூறுகள்.இத்தகைய அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகின்றவர்கள் யாரெனில் இத்தாலி என்ற அந்நிய நாட்டிலிலுள்ள பாஷிசம் என்ற பயங்கரவாதக்கொள்கையை மனமார ஏற்று அதனை கடைபிடித்தொழுகும் சங்க்பரிவார சிந்தனையாளர்கள்தான்.இந்த சண்டாளர்கள் நாம் மேலே குறிப்பிட்ட பொய்யைபரப்புவதோடு நின்று விடவில்லை.வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை குழித்தோண்டி புதைக்கவும் செய்தார்கள்.அப்படி அவர்களால் புதைக்கப்பட்ட வரலாறுதான் இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு.இந்த அவதூறுகள் பாசிஸ்டுகளுக்கு அவர்கள் எதிர்பார்த்த பலனையும் பெற்றுத்தந்தது.இந்தப்பொய்கள் இன்றைய முஸ்லிம்களுக்கிடையே குற்ற உணர்வை ஏற்படுத்தி தலைதாழ்த்தச்செய்தது என்றால் அது மிகையன்று.
முஸ்லிம்கள் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராடிய வரலாறு என்பது நீண்ட நெடியது.முஸ்லிம்களின் தியாக‌ வரலாறு இடம்பெறாத வரலாறு என்பது குறையுடையதே!ஆதலால் முஸ்லிம்களின் இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் தியாகவரலாறு மக்கள் முன் சமர்ப்பிக்கவேண்டியது நம் கடமை.அந்தவகையில் முஸ்லிம்களின் அர்ப்பணிப்பு வரலாற்றின் சில பகுதிகளை பாலைவனத்தூது வாசகர்களோடு பகிர்ந்துக்கொள்கிறோம்.
தூதன்

முஸ்லிம்களின் அர்ப்பணிப்பு வராலாற்றை இங்கு க்ளிக் செய்து அறிந்து கொள்ளவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.