15/8/09

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் முதுகெலும்பு: கேரளமாநில எஸ்.டி.பி கட்சித்தலைவர் ஷெரீஃப்

0 கருத்துகள்
துபாய்:வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்றும் அவர்களை Non residents Indian என்று கூறாமல் ஓவர்ஸீஸ் இந்தியன் சிட்டிசன் என்று அழைக்கவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் கட்சியின் கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கே.எம்.ஷெரீஃப் கூறினார்.
எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் துபாய் ஒருங்கிணைப்புக்குழு துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் ஏற்பாடுச்செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் அவர். எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கோரி கேரள நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு முழுமையான அளவில் ஆதரவு தருவதாக ஷெரீஃப் வாக்குறுதியளித்தார்.
இந்தியா இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தியதை தொடர்ந்துதான் இந்தியாவில் போலி என்கவுண்டர்களும், குண்டுவெடிப்புகளும் நடக்கின்றன. இஸ்ரேல்,அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்தியாவருகை தரும்பொழுது தீவிரவாதத்தாக்குதல்களுக்கு ஏற்பாடுச்செய்து இந்தியாவை பதட்டமிகுந்த தேசமாக சித்தரிக்கின்றனர். மாலேகான்,மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவார்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை உபயோகித்துள்ளனர்.இம்மாதிரியான குண்டுவெடிப்புகளில் போலியான வழக்குகளை பதிவுச்செய்து உயர்கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும்,வியாரத்தில் சிறந்து விளங்கும் முஸ்லிம்களும் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய வழக்குகளில் அநியாயமாக சிக்கியவர்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடக்கூடாது என்று வழக்கறிஞர் சங்கங்கள் அரசியல் சட்டத்திற்கு மாற்றமான முறையில் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.
இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள் மிகுந்த பாரபட்சமான முறையில் நடத்தப்படுகின்றார்கள்.இந்தியாவின் அரசியல் சட்டம் சிறப்பான முறையில் சிறுபான்மையர்களின் உரிமைகளும்,வணக்க வழிபாட்டுமுறைகளும் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தாலும் இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் புழுக்களை போல் வாழ்ந்துவருகின்றார்கள்.இந்தியா ஒளிர்கிறது என்று ஒரு பக்கம் கூறினாலும் ஊழலும்,பட்டினி மரணங்களும் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் நிற்கிறது.சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆனபோதிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தியாவை ஆட்சி செய்தபோதிலும் சாதாரண குடிமகனின் அடிப்படை பிரச்சனைக்களுக்கு தீர்வு காண‌ப்படவில்லை.சாதாரண குடிமகன்கள் ஒருபோதும் அரசிய உயர் பதவிகளுக்கு வர முடிவதில்லை.யார் ஆட்சி செய்தாலும் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எப்பொழுதும் உயர்ஜாதியினர்தான் அரசு அதிகாரத்தின் உயர்பதவிகளின் செங்கோலை ஏந்த முடிகிறது.தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பல்வேறு கமிஷன்கள் தெளிவுப்படுத்துகின்றன.
பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் முலயாம்சிங்,லாலுபிரசாத் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் கூட பிற்படுத்தப்பட்டோர் புழுக்களைப்போல் வாழ்கின்றனர்.சிறுபான்மையின மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் கூட பாரபட்சம் காட்டுகின்றனர்.மண்டல் கமிஷன் அறிக்கைக்குப்பின் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பிற கட்சிகளைப்போல்தான் இக்கட்சிகளும் செயல்படுகிறது.நீதிமன்றம் உத்தரவிட்ட கிரிமீ லேயர் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. விவசாயிகளின் பெயரைச்சொல்லி ஆட்சிக்கு வரும் கட்சிகள் அதிகாரம் கையில் கிடைத்தவுடன் அவர்களை மறந்து விடுகின்றார்கள். ஒரிஸ்ஸாவில் பாக்ஸைட் தாதுப்பொருளை பாதுகாப்பதற்காக அரசு அங்கு வசிக்கும் சிறுபான்மையனரான‌ மலைவாழ்மக்களை மாவோவாதிகளாக சித்தரித்து அவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கனிம வளங்கள் உள்ள‌ மற்றும் விவசாய நிலங்களுள்ள பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையனரை விரட்டியடித்துவிட்டு அங்கு நில செஸ் என்ற பெயரில் குத்தகைதாரர்களுக்கு அதனை கொடுக்கிறது அரசு. இன்று இந்தியாவில் இடதுசாரிகளோ வலதுசாரிகளோ இல்லை, மாறாக முதலாளித்துவ சார்புடையவர்கள்தான் உள்ளனர்.இடதுசாரிகள் மேலும் வலதுசாரிகளாக மாறி வருகின்றார்கள்.ஏழை மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு எவரும் இல்லை.
இத்தகைய மோசமான சூழலிருந்துதான் சோஷியல் டெமோக்ரேடிக் கட்சி உருவெடுத்தது.16 மாநிலங்களில் இன்று எஸ்.டி.பி யின் கேடருகள்(cadres) வலுவான நிலையில் உள்ளனர்.கட்சி தற்ப்பொழுது கேடர்களைத்தான்(cadres) தேர்வுச்செய்து வருகிறது.பல ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளிலிலுள்ள பல தரப்பட்ட மக்களிடம் கலந்துபேசி பல்வேறு பொதுக்கூட்டங்களும்,கருத்தரங்குகளும் ஏற்பாடுச்செய்து நடத்தியதன் முடிவாகத்தான் சோஷியல் டெமோக்ரேடிக் கட்சி உருவானது.உறுப்பினர் சேர்க்கை இதுவரை துவங்கவில்லை.திறமைமிக்கவர்களும்,கல்வியாளர்களும் கட்சியில் இணைய ஆரம்பித்துள்ளனர்.இவ்வாறு முஹம்மதுஷெரீஃப் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு அப்துல்லத்தீஃப் தலைமை வகித்தார்.இப்ராஹீம் வாழ்த்துரை வழங்கினார்.ஸைனுல் ஆப்தீன் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு ஓட்டுரிமை வழங்க அரசை வலியுறுத்த கோரும் மனுவை வழங்கினார். அபுதாபியைச்சார்ந்த ஹஸன் வரவேற்புரையாற்றினர்.ஸஹதுல்லா நன்றியுரை நவின்றார்.
செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.