2/8/09

கேரள மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷிஹாப் தங்கள் மரணமடைந்தார்

0 கருத்துகள்
கேரள முஸ்லீம் லீக் மாநிலத்தலைவரான பாணக்காடு செய்யத் ஷிஹாப் தங்கள் நேற்று இரவு 8.40 மணியளவில் தனியார் மருத்துவமனையொன்றில் வைத்து மரணமடைந்தார். .(இன்னாலில்லாஹி...).
அவருக்கு வயது 73. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலுள்ள குளியலறையில் கீழே விழுந்த அவரை கே.பி.எம்.ஆர்சிட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உதட்டில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டது. இரவு 8.30 மணிவரை உரையாடிக்கொண்டிருந்த ஷிஹாப் தங்கள் தனக்கு உடல் களைப்பு இருப்பதாக கூறியதை அடுத்து அவசர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதயம் இயங்கா நிலையைத்தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் மரணமடந்தார். (இன்னாலில்லாஹி...).அவருக்கு 2 மனைவிகள். ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். இவருக்கு 3 மகன்களும்,2 மகள்களும் உள்ளனர்.
1936 ஆம் ஆண்டு அன்றைய கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பாணக்காடு பூக்கோயா தங்களின் மகனாக பிறந்த ஷிஹாப் தங்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு மஸ்ஜித் தர்ஸுகளில் அரபி இலக்கணம், இஸ்லாமிய விஞ்ஞானம் ஆகியன பயின்றார். பின்னர் எகிப்திலிலுள்ள உலக புகழ்பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பல்கலைகழகத்திலிருந்து பேராசிரியராக பணியாற்ற விடுத்த அழைப்பை தந்தையின் மறுப்பின் காரணமாக ஷிஹாப் தங்களுக்கு ஏற்க இயலவில்லை. தனது 39 ஆம் வயதில் கேரள மாநில் முஸ்லிம் லீக் தலைவராக பொறுப்பேற்ற ஷிஹாப் தங்கள் தொடர்ந்து 34 வருடங்களாக பணியாற்றி வந்தார். இத்துடன் பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் பொறுப்பையும் ஏற்றிருந்தார். கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களையும், மத்திய மாநில அமைச்சர்களையும் தேர்வுச்செய்யும் அதிகாரம் பெற்றிருந்தவர் ஷிஹாப் தங்கள். கவர்னர்,அமைச்சர், எம்.பி போன்ற அரசியல் அதிகாரங்களில் பங்குபெறும் வாய்ப்பு இருந்தும் அதிலிருந்தெல்லாம் ஒதுங்கியே இருந்தவர் ஷிஹாப் தங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அவரது உடல் இன்று மாலை 3 மணியளவில் பாணக்காடு ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் அடக்கம் செய்யபடுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.