2/8/09

முஷாரஃபிற்கு அரசியல் அடைக்கலம் தரத்தயார் சவூதி அரேபியா அறிவிப்பு

0 கருத்துகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஸாரஃப் வேண்டுகோள் விடுத்தால் அரசியல் அடைக்கலம் தரத்தயாராக இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் தூதர் அப்துல் அஸீஸ் பின் இபராஹீம் அல்கதீர் இதனைத்தெரிவித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முஷாரஃப் பிரகடனப்படுத்திய அவசரகாலச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இதனால் முஷாரஃப் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார் எனக்கருதப்படுகிறது. முஷாரஃப் மீது தேசத்துரோக நடவடிக்கையின் பேரில் தண்டிக்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது.
முஷாரஃப் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இக்காலக்கட்டத்தில் ராணுவ மேலதிகாரிகள் அரசியல் சட்டதிட்டத்தை மீறியதாகவும், குடிமக்களின் உரிமைகளை மறுத்ததாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அவசரச்சட்டம் அமுலில் இருந்த காலக்கட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 37 உத்தரவுகளும், தற்போதைய அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி நாடுதிரும்ப காரணமான உத்தரவும் சட்டவிரோதமென்று உச்சநீதி மன்றம் விமர்சித்துள்ளது. இதனால் சர்தாரியின் நிலையும் சந்தேகத்தின் நிழலிலுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.