2/8/09

போபால் விஷ வாயு: வாரன் ஆண்டர்சனை கைதுச்செய்ய நீதி மன்றம் உத்தரவு

1 கருத்துகள்

போபால் விஷ வாயு விபத்து வழக்கில் யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் முன்னாள் சேர்மன் வாரன் ஆண்டர்சனை கைதுச்செய்ய போபால் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஆண்டர்சனை உடனே கைதுச்செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்க சி.பி. க்கு நீதிபதி உத்தரவிட்டார். பல முறை வாரண்ட் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத ஆண்டர்சனை போபால் விஷ வாயு வழக்கில் 1992 ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
2002 இல் நீதிமன்றம் உத்தரவிட்ட வாரண்டின் படி ஏன் ஆண்டர்சனை கைதுச்செய்யவில்லை என்று விளக்க அளிக்குமாறு சி.பி.ஐக்கும் நீதிபதி கட்டளை பிறப்பித்தார். இதன் நகல் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனில் ஏற்பட்ட 42 டன் அளவிலான மெதில் ஐசோசியனேட் என்றவிஷ வாயு கசிவினால் உருவான பாதிப்பில் இதுவரை 25 ஆயிரம் பேர் மரணித்துள்ளனர். விஷ வாய் கசியத்தொடங்கி 72 மணிநேரத்திற்குள்ளாகவே 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையிலான மக்கள் இறந்தனர். இதனைத்தொடர்ந்து அதன் அப்போது அதன் சேர்மனாக இருந்த வாரன் ஆண்டர்சன் மீது வேண்டுமென்றே செய்யப்பட்ட கூட்டுக்கொலை என்ற வழக்கு பதிவுச்செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ஆண்டர்சனை கைதுச்செய்ய இந்திய அரசால் இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் வேறொன்றுமில்லை அவர் ஒரு அமெரிக்கர். வாரன் ஆண்டர்சனை கைதுச்செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டதைத்தொடர்ந்து விஷ வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஒன்றுகூடி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். சி.பி. வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிப்பதாகவும் இந்த தீர்ப்பு வரவேற்கதக்கது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.