3/8/09

அமெரிக்கா தற்பொழுதும் முஸ்லிம் நாடுகள் விரும்பாத தேசம் ‍ ஆய்வில் தகவல்

0 கருத்துகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா புதிய அணுகுமுறைகளை ஏற்றுக்கொண்டபோதிலும் தற்பொழுதும் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவை எதிரியாகவே கணிப்பதாக ஃபியூவ் ஃபவுண்டேசன்(Pew foundation) நடத்திய‌ சர்வேயில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வு தெரிவிப்பதாவது, அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கையில் தற்பொழுதும் முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்புள்ளது. உலகத்தின் பெரும்பாலான நாடுகள் ஒபாமா மானியாவின்(mania) பிடியில் உள்ளது. ஆனால் இந்த மானியாவிலிருந்து முஸ்லிம் நாடுகள் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் 64 சதவீத மக்களும், ஃபலஸ்தீனில் 77 சதவீத மக்களும் அமெரிக்காவை எதிரி நாடாகவே கருதுகின்றனர்.
அமெரிக்காவின் வெளிநாட்டுக்கொள்கைப்பற்றிய கவலை முஸ்லிம் நாடுகளில் அதிகமாகிக்கொண்டிருந்தாலும் முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ்ஷை ஒப்பு நோக்குகையில் ஒபாமாவை முஸ்லிம் நாடுகள் ஏற்றுக்கொள்ளதக்கவராகவே காண்கின்றன. ஒபாமாவின் மக்கள் தலைவர் என்ற இமேஜ் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்காபற்றிய அபிப்ராயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
பாகிஸ்தான், எகிப்து,ஜோர்டான்,துருக்கி,ஃபலஸ்தீன் போன்ற நாடுகளை உட்படுத்தி நடத்திய சர்வேயில் 30 சதவீத மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர். புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கெதிரான போர், இஸ்ரேலை பாதுகாப்பது, முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது, மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் முதலீட்டின் கட்டுப்பாட்டை உரிமையாக்குவதற்கான முயற்சி ஆகிய செயல்பாடுகளுக்கு பின்னால் ரகசிய திட்டங்கள் இருப்பதாக பெரும்பாலான முஸ்லிம்களும் எண்ணுகின்றனர். அதேவேளையில் பிரான்சு, ஜெர்மனி உள்பட ஐரோப்பிய நாடுகளிலும், ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலெல்லாம் ஒபாமாவிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.