6/8/09

ஈரான் அதிபராக அஹ்மத் நிஜாத் மீண்டும் பதவியேற்பு

0 கருத்துகள்
தெஹ்ரான்:ஈரான் அதிபராக அஹ்மத் நிஜாத் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார்.
அடுத்துவரும் 4 ஆண்டுகளுக்கு ஈரானை வழிநடத்திச்செல்லும் அதிகாரத்தை கடந்த ஜூன் 12 ஆம்தேதி அன்று மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள ஈரானின் மார்க்க தலைவர் ஆயத்துல்லா காமினி கடந்த திங்கள் கிழமை அனுமதி அளித்திருந்தார்.
நேற்று பாராளூமன்ற உறுப்பினர்கள்,ராணுவ உயர் அதிகாரிகள்,வெளிநாட்டு அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் 52 வயதான‌ அஹ்மத் நிஜாத் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவையை உருவாக்க நிஜாதிற்கு 2 வார அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பதவியேற்றபின் உரைநிகழ்த்திய அஹ்மத் நிஜாத்,"ஈரானின் ஸ்திரத்தன்மையை இல்லாமலாக்குவதற்கும்,கலவரத்தை தூண்டிவிடுவதற்கும் மேற்கத்திய சக்திகள் செய்து வரும் முயற்சியை தடுப்போம். சர்வதேச தளத்திலுள்ள பாரபட்சத்தை முடிவுக்கொண்டு வருவதற்கும், அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதமான நடவடிக்கைகளிலும் ஈரான் முன்னணியில் நிற்கும். ஜூன் 12 நடைபெற்ற தேர்தலில் பெற்ற பாரம்பரியமான வெற்றி ஈரானிலும்,உலகத்திலும் புதிய அத்தியாயங்களை உருவாக்கும்.இதுவரை ஈரான் கடைபிடித்துவந்த வெளிநாட்டுக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.உலகத்தில் வலிமைமிக்க நாடாக ஈரானை மாற்றுவதற்கான முயற்சியை முன்னெடுத்துச்செல்வோம்."என்றார்.
அஹ்மத் நிஜாதின் இந்த உரை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான முயற்சிகளை தொடருவதுடன்,இஸ்ரேலுக்கு எதிரான அணுகுமுறையை கடின மாக்குவதற்கும் ஈரான் முயற்சிச்செய்வதை குறிப்பாக உணர்த்துவதாக கருதப்படுகிறது.அஹ்மத் நிஜாத் அறிவாற்றலும்,துணிச்சலும் மிக்கவர் மேலும் அவர் கடினமாக உழைக்கக்கூடியவர் என்று சத்தியப்பிரமாணத்திற்கு அனுமதியளித்துவிட்டு கருத்து தெரிவித்திருந்தார் ஈரானின் மார்க்க தலைவர் காமினி.
News Source:Thejas Malyalam Daily

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.