7/8/09

தீவிரவாத எதிர்ப்புச்சட்டம் வாபஸ்பெறுவதைக்கண்டித்து மலேகான் குடிமக்கள் போராட்டம்

0 கருத்துகள்

மும்பை:மலேகான் குண்டுவெடிப்புக்குற்றவாளிகளான ஹிந்துத்தீவிரவாதிகளுக்கெதிரான தீவிரவாத எதிர்ப்பு சட்டம் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) வாபஸ்பெற நடக்கும் முயற்சியை கண்டித்து மலேகான் வாழ் குடிமக்கள் மும்பை ஆஸாத் மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
மலேகான் காங்கிரஸ் கமிட்டி,இளைஞர் காங்கிரஸ்,காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு ஆகியன இணைந்து இந்த தர்ணாவிற்கு ஏற்பாடுச்செய்திருந்தன.
2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த கொலைச்செய்யப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையை தொடர போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.பெண்துறவி சாத்வி பிரக்யாசிங் தாக்கூர்,முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் உள்பட 11 பேருக்கு எதிராக சுமத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை31 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. குற்றவாளிகளுக்கெதிரான வலுவான ஆதாரங்களை சமர்ப்பிப்பதில் தீவிரவாத எதிர்ப்பு படை காட்டிய ஆர்வமின்மையே நீதிமன்ற தீர்ப்பிற்கு காரணம் என போராட்டத்தில் ஈடுபட்ட மலேகான் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
2006 இல் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தி அநியாயமாக கைதுச்செய்யப்பட்ட இளைஞர்கள் இன்னும் சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவித்தவண்ணம் உள்ளனர். அவர்கள் மீதான தீவிரவாத எதிர்ப்புச்சட்டம் வாபஸ்பெறப்படவில்லை என்று போராட்டத்திற்கு தலைமைவகித்த மலேகான் எம்.எல்.ஏ ஷேக் ராஷித் கூறினார். ஹிந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்திற்கெதிராக புலனாய்வு நடத்தப்படவேண்டும் என்றும் கொல்லப்பட்ட கர்காரே சேகரித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மலேகான் குடிமக்கள் வலியுறுத்தினர். (இதற்கிடையில் மஹாராஷ்ட்ரா முதல்வர் அசோக்சவான் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்)
செய்தி:தேஜஸ் மலையாளம் நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.