7/8/09

********** ஈ **********

0 கருத்துகள்
ஈக்கென்று ஒரு குணம் உண்டு. அதன் குணமானது ஒரு மனிதன் அழகான உடை அணிந்து நறுமணம் பூசி வந்தால் ஈயானது அவனது உடையையோ,வாசனையையோ ரசிப்பது இல்லை, மாறாக அவனது உடலில் துர்நாற்றம் எந்த பகுதியிலிருந்துவருகிறது, எங்கு ஊலை வருகிறது, எங்கு மூக்கு ஒழுகிறது என்று பார்த்து மோப்பம் பிடித்து அந்த இடத்தில் அமர்வது தான் ஈயின் குணம்.
ஈயானது பாகுபாடு பார்ப்பது இல்லை முஸ்லிமா, இந்துவா, கிறிஸ்தவனா, மேல் ஜாதியா, கீழ்ஜாதியா என்று. அதன் வேலையை அது செய்யும். ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிக்கை துறை சார்ந்தவர்களுக்கு இந்த குணம் இருக்க வேண்டும். குறிப்பாக குறையை சுட்டி காட்டுவதில் ஈக்கள் பேதம் பார்ப்பது இல்லை. ஆனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்கள் இஸ்லாமியர்கள் மீது மட்டுமே இந்த குணத்தை காட்டுகிறார்கள். உதரணமாக ஒரு செய்தி: கடந்த ஆண்டு உ.பி யில் இம்ரானா என்ற பெண் தன் மாமனாரால் கற்ப்பழிக்கப்பட்டாள் என்று நடக்காத ஒரு செய்தியை நடந்ததாக எழுதினார்கள். எந்த அளவுக்கு என்றால் பா.ஜ.க பட்டிமன்றம் நடத்துமளவுக்கு. ஆனால் அதே உ.பி யில் தானிதீக் என்ற கிராமத்தில் ஓர் உயர் ஜாதி இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமிய இளைஞன் காதலித்து அழைத்து சென்று விட்டதால் கோபமான பாஸிச கூட்டம் தானிதீக் கிராமத்தின் உள்ளே புகுந்து காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 400க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய பெண்களை மானபங்கம் செய்தார்கள். ஈ குணத்தோடு பார்க்கவேண்டிய இந்த செய்தியை மூடி மறைத்தது பாஸிச பத்திரிக்கை கூட்டம்.
சமீபத்தில் ஒரு செய்தி: அமெரிக்க அதிபர்கள் எதை அடித்தாலும் அல்லது எதால் அடிபட்டாலும் அது பிரபலமாகிவிடும். கடந்த ஆண்டு மனித குல எதிரியாக இருந்த அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஒரு காலனி(ஷு ) பதம் பார்த்தது, அதை தொடர்ந்து அந்த காலணி(ஷு ) பிரபலமானது, அது மிக உயர்ந்த விலைக்கு ஏலம் போனது. ஆனால் அதை வீசியவர் நிலை என்ன ஆனது? என்பதை உலகம் மறந்து போனது. அதை தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு சேகரிப்பின் போது தொகுதி மக்களுக்கு முகத்தை காட்டவந்த பல அரசியல்வாதிகளுக்கு,தொகுதி மக்கள் பரிசாக தந்தது; காலனி வீச்சு.
அமெரிக்க அதிபர் ஒபாமா பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது ஒரு ஈ அவருக்கு தொல்லை தந்தது.(ஈ க்கு தெரியுமல்லவா மனிதனிடம் நாற்றப்பகுதி எங்குள்ளது என்று) அதை அடித்து வீழ்த்திய பிறகு தான் பேட்டியை தொடர்ந்தார்.(அதிபரா அல்லது பாமரனா என்று ஈ பாகுபாடு பார்ப்பது இல்லை.) அமெரிக்காவை ஈ குணத்தோடு பார்த்தால் பல பத்திரிக்கையாளர்களையும், நாடுகளையும் அடித்து வீழ்த்தியுள்ள அமெரிக்காவை பத்திரிக்கைகள் ஈயைப் போன்று அதன் துர்நாற்றத்தினை வெளிக்கொண்டு வந்திருக்கவேண்டாமா?. சரி நம் விசயத்திற்க்கு வருவோம் அமெரிக்க அதிபரால் அடிப்பட்ட அந்த ஈ உலக புகழ் அடைந்துவிட்டது. ஆனால் இன்று இந்தியாவில் அமெரிக்கா பற்றி அறியப்படும்,அறிவிக்கப்படும் செய்தி என்னவென்றால் அமெரிக்க காண்டாமிருகத்தின் பிறந்தநாள், பூங்காவில் பாண்டா கரடி குட்டி போட்டது, கத்ரினா புயல் இப்படிப்பட்ட செய்திகளை தான். ஈ குணத்தோடு அமெரிக்க செய்திகள் வெளிவருவதில்லை. அமெரிக்கா கட்டவிழ்த்துவிடும் காட்டுமிராண்டித்தனம் அமெரிக்க மக்களின் மனநிலை இவற்றை பற்றி அமெரிக்கர்கள் வெளிக் கொண்டு வந்தால் ஒழிய ,அதனை வெளிக்கொண்டுவருவது கடினம். இதனை சமீபத்தில் ஒரு அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் மரியம் இஸ்மாயில் விடியல் வெள்ளி மாத இதழில் எழுதிய கட்டுரை மூலம் அறிய முடிந்தது. இஸ்தான்ஃபுல் நகரம் உண்டா என்ற அமெரிக்க மக்களின் கேள்வி அவர்களின் அறியாமையை சுட்டிக்காட்டியது. இது ஒரு ஈ யில் பிறந்த ஞானம்.
அகமுகன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.