9/8/09

குவாண்டனாமோ சிறையில் கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன் -ஜவாத்

0 கருத்துகள்
வாஷிங்டன்:குவாண்டனாமோ சித்திரவதைக்கூடத்தில் தான் கொடூரமான முறையில் சித்திரவதைச் செய்யப்பட்டதாக 7 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான 19 வயது முஹம்மது ஜவாத் கூறுகிறார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளுவதற்காக வேண்டி மனித தன்மையற்ற முறையில் தான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக ஜவாத் தெரிவிக்கிறார்.
ஜவாத் கடந்த ஆகஸ்ட் 1 ஆம்தேதி விடுவிக்கப்பட்டார். குவாண்டனாமோ சிறையில் மிகவும் வயது குறைந்த கைதி ஜவாத் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவாதிற்கெதிராக ஒரு சாட்சி கூட சாட்சியம் அளிக்கவில்லை என்று ஜவாதின் வழக்கறிஞர் மேஜர் எரிக் மோண்டோல்வா கூறுகிறார். ஜவாதை கைதுச்செய்யும்பொழுது சம்பவம் நிகழ்ந்த இடத்திலிலுள்ள நபர்களை தான் விசாரித்ததாகவும் அமெரிக்கா கூறும் குற்றத்தை ஜவாத் செய்ததை எவரும் காணவில்லை என்று கூறியதாகவும் எரிக் தெரிவித்தார். அமெரிக்க ராணுவத்திற்கெதிராக கிரானைட் தாக்குதல் நடத்தியதாக ஜவாத் 2002 ஆம் ஆண்டு கைதுச்செய்யப்பட்டார். அப்போது ஜ‌வாதிற்கு 12 வயது.
செய்தி:தேஜஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.